ஈரானின் ஷாஹெத்-136 ட்ரோன்கள் சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியுள்ளன. இதன் காரணமாக ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Aramco Attack: உலகின் கச்சா எண்ணெய் வங்கியாக கருதப்படும், அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் ட்ரோன்கள் தாக்கியுள்ளன.

Saudi Arabia Aramco Attack: சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானின் ஷாஹெத்-136 ட்ரோன்கள் தாக்கியுள்ளன.
அராம்கோ மீது ஈரான் தாக்குதல்:
சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரானின் ஷாஹெத்-136 ட்ரோன்கள் தாக்கியுள்ளன. இதையடுத்து அதன் ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையத்தில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய ராணுவ தாக்குதலில், ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டார். அதற்கு பதிலடி தரும்வகையில், அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்த சூழலில் உலகின் மிக்கபெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அராம்கோ மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
வீடியோ வைரல்..
தாக்குதலுக்குப் பிறகு அராம்கோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீபற்றி எரிந்து புகைசூழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உடனடியாக செயல்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவித உயிரிழப்பும் இல்லை எனவும் கூறப்படுகிறது. சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள அராம்கோ நிறுவனத்தின் ராஸ் தனுரா நிலையம், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாளொன்றிற்கு 550,000 பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயைச் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதன் அருகிலுள்ள ஏற்றுமதி முனையம் உலகளாவிய சந்தைகளுக்கு அனுப்புவதற்காக மில்லியன் கணக்கான பீப்பாய்களைக் கையாளுகிறது.
BREAKING — 🇸🇦🇮🇷🇺🇲Scenes from Saudi Aramco in Ras Tanura, Saudi Arabia. pic.twitter.com/6rplFOX1mJ
— UK Report (@UK_REPT) March 2, 2026
சந்தை விலையில் தாக்கம்:
ராஸ் தனூரா நிலைய வளாகத்தில் சுத்திகரிப்பு அலகுகள், விரிவான சேமிப்பு வசதிகள், குழாய் நெட்வொர்க் மற்றும் சர்வதேச எண்ணெய் டேங்கர்களை வைப்பதற்காக கட்டப்பட்ட ஒரு பெரிய துறைமுகம் ஆகியவை அடங்கும். உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இங்கு விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளம. ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கான எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமானது, ராஸ் தனுராவில் ஏற்படும் எந்தவொரு இடையூறும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளை பாதிக்கும். உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்ற இறக்கத்தைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
அராம்கோவின் முக்கியத்துவம்:
அராம்கோ எனப்படுவது சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாகும். உற்பத்தி மற்றும் இருப்பை வைத்துக்கொள்ளும் திறன் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இந்நிறுவனம் திகழ்கிறது. எண்ணெய் ஆய்வு, உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றில் மட்டுமின்றி, ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சவுதி அரேபிய அரசின் மிக முக்கிய பங்கும் இந்நிறுவனம் வகிக்கிறது. ஆசிய நாடுகளுக்கான 70 சதவிகித எண்ணெய் இந்த நிறுவனத்திடமிருந்தே பெறப்படுகின்றன. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பிரதான வணிக கூட்டாளியாக உள்ள சூழலில், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இதன் கிளை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனம் 270 பில்லியன் பீப்பாய் எரிபொருளை கையிருப்பில் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Frequently Asked Questions
சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியது எது?
அராம்கோ மீதான தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது?
தாக்குதலுக்குப் பிறகு அராம்கோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீப்பிடித்தது, ஆனால் உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எந்த உயிரிழப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுரா நிலையம் ஏன் முக்கியமானது?
ராஸ் தனுரா நிலையம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் ஒன்றாகும். இது நாளொன்றுக்கு 550,000 பீப்பாய்களுக்கும் அதிகமான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
அராம்கோ உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமா?
ஆம், அராம்கோ சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாகும். உற்பத்தி மற்றும் இருப்பை வைத்துக்கொள்ளும் திறன் அடிப்படையில் இது உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும் திகழ்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















