Asian Champions Trophy: சீனாவிற்கு ஆதரவு..சீனக்கொடியை கையில் ஏந்திய பாகிஸ்தான் வீரர்கள் - ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நடந்த சம்பவம்!
ஆசிய சாம்பியன்ஷிப் டிராபியை இந்திய ஹாக்கி அணி 5 வது முறையாக வென்று அசத்தியது. இறுதிப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சீன கொடியை கையில் ஏந்தி சீனாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆசிய சாம்பியன்ஷிப் டிராபியை இந்திய ஹாக்கி அணி 5 வது முறையாக வென்று அசத்தியது. இறுதிப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சீன கொடியை கையில் ஏந்தி சீனாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
மீண்டும் வரலாறு படைத்த இந்திய அணி:
சீனாவின் ஹுலுன்பியர் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 5வது முறையாக வென்று வரலாறு படைத்தது. விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டு விளையாடியது. கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் டிராபியின் வெற்றியை தொடர்ந்து அதே முனைப்புடன் களமாடியது இந்திய ஹாக்கி அணி. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது.
சீனக்கொடியை கையில் ஏந்திய பாகிஸ்தான் வீரர்கள்:
Pakistan's Hockey team Supporting China In final after loosing from China In SF salo ne china ko baap bana liya hai #HockeyIndia #IndiaKaGame #INDVKOR #ACT24 #SemiFinals #HockeyIndia pic.twitter.com/tZKRi9zQF4
— Aman gupta (@AmanGuptaGolu) September 17, 2024
விறுவிறுப்புடன் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சீனக்கொடியுடன் இருந்தனர். அந்த வகையில் பாகிஸ்தான் வீரர்கள் சீனாவிற்கு தங்களது ஆதரவை அளித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் இன்று வைரலானது.
அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்திய சீனா:
முன்னதாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான வலுவான போட்டியாளராக இருந்த பாகிஸ்தானை சீனா வீழ்த்தி இருந்தது. அதாவது 1-1 என்று ஆட்டம் சம நிலையில் இருந்த போது பாகிஸ்தான் அணிக்கு பெனால்டி ஷூட்அவுட் கிடைத்தது. ஆனாலும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை, அதே நேரத்தில் சீனா இரண்டு பெனால்டிகளை 1-1 (2-0) என்ற கணக்கில் அடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
மேலும் படிக்க: ICC:மகளிர் டி 20 உலகக் கோப்பை - இனி எல்லாருக்கும் ஒரே பரிசு தொகை தான்! அசத்தல் அறிவிப்பை வெளியிட்டது ஐசிசி