வாவ்.. ஆப்கானிஸ்தான் அணிக்கு வழிகாட்டியாகும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான அஜய் ஜடேஜாவை 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியின் வழிகாட்டியாக ஏசிபி( Afghanistan Cricket Board )நியமித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.
உலகக்கோப்பைத் தொடர்:
இதில் மொத்தம் 10 அணிகள் பங்கு பெறுகின்றன. அதன்படி, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றன.
இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான அஜய் ஜடேஜாவை 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியின் வழிகாட்டியாக ஏசிபி( Afghanistan Cricket Board )நியமித்துள்ளது.
இது தொடர்பாக Afghanistan Cricket Board இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவின் படி, அஜய் ஜடேஜா ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் ஜெர்ஸியை அணிந்த படி இருக்கிறார்.
1996 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பைகள் உட்பட 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் இவர் 196 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
ஒரு பேட்ஸ்மேனாக தன்னுடைய சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்திருக்கிறார். அந்த வகையில், 6 சதங்கள் மற்றும் 34 அரை சதங்கள் உட்பட மொத்தம் 5935 ரன்களை குவித்துள்ளார். அது மட்டுமின்றி நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒரு நாள் போட்டிகளில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் ஜடேஜா பணியாற்றியுள்ளார். 52 வயதான இவர் பல வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.
மேலும் படிக்க: ODI World Cup Records: உலகக் கோப்பையில் அதிக வெற்றிகள்.. கபில் தேவ்- ஐ பின்னுக்கு தள்ளிய தோனியின் மாஸ்டர் மைண்ட்!
மேலும் படிக்க: ODI World Cup 2023: உலகக்கோப்பை வரலாற்றில் சொற்ப ரன்களில் சுருண்ட அணிகள் இதுதான்! லிஸ்ட் பெருசா போய்ட்டே இருக்கே!