Vastu Tips: திருமண தடையா? அப்போ வீட்டுல இந்த விஷயங்களை மாத்துங்க.. வாஸ்து சொல்வது இதுதான்..
திருமணம் ஆகாத ஆண்களும், பெண்களும் தங்கள் வீடுகளில் வாஸ்து முறைப்படி சில விஷயங்களை மாற்றிக்கொண்டால் திருமணத்தடை நீங்கும் என நம்பப்படுகிறது
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணம் என்பது வாழ்வின் திருப்புமுனையாகும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், திருமணம் என்னும் முறையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருவது திருமணம். அப்பேற்பட்ட திருமண வாழ்வு அனைவருக்கும் எளிதில் அமைந்துவிடுவதில்லை.
இன்று பலரும் நீண்ட மாதங்களாக, நீண்ட வருடங்களாக பெண் தேடி அலைவதை பார்த்திருப்போம். வீடுகளில் உள்ள சில வாஸ்து முறைகள் முறைப்படி அமையாததாலும் திருமணம் தள்ளிப்போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என நம்பப்படுகிறது.
தூங்கும் திசை:
திருமணமாகாத ஆண்களும், பெண்களும் தங்கள் தலையை வடமேற்கு திசையில் வைத்து தூங்க வேண்டும். இதன் காரணமாக, வீட்டில் நேர்மறை அதிர்வலைகள் உண்டாகும். இதனால் வீட்டில் உள்ள தடைகள் நீங்கி எந்த செயலை தொடங்கினாலும் வெற்றி வசப்படும். திருமண பேச்சுக்களும் வெற்றிகரமாக அமையும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது
படுக்கையறை:
திருமணத் தடையால் தவிக்கும் ஆண்கள் தங்களது படுக்கையறையை வடகிழக்கு திசை, தெற்கு மூலை அல்லது மேற்கு மூலையில் அமைப்பதே மிகவும் சிறப்பு ஆகும். பெண்களின் படுக்கையறை வடமேற்கு திசையிலே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் அமைக்க வேண்டும் என நம்பப்படுகிறது
அறைகளின் நிறம்:
வீட்டின் உள்ளே பெண்களின் அறைகளில் எப்போதும் அடர் வண்ணங்களான கருப்பு, சாம்பல் நிறங்களை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வெளிர்நிற வண்ணங்களை பயன்படுத்த வேண்டும். ஆண்களின் அறைகளில் லேசான மஞ்சள், வெள்ளை கலந்த நிறங்களை பயன்படுத்த வேண்டும். மாங்கல்ய தோஷம் நீங்க அறை கதவுகள் சிவப்பு மற்றும் அடர்பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது
தவிர்க்க வேண்டியவை:
- வீட்டில் திருமணமாகாத பெண்கள் தென்கிழக்கு திசையில் தலைவைத்து தூங்கக்கூடாது. இது வீட்டில் எதிர்மறையான நிகழ்வுகளை ஏற்படுத்தும்.
- பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி அமைத்தால் அது தென்மேற்கு திசையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும் என சொல்லப்படுகிறது
- வீட்டில் தேவையற்ற பொருட்கள், குப்பைகள் அடைந்திருப்பது போல வீட்டை வைத்திருக்கக்கூடாது. இதனால், வீட்டில் நேர்மறை எண்ணங்கள் ஏற்படாது என நம்பப்படுகிறது
மேலே கூறியவற்றை கடைபிடித்து உங்களின் திருமணத் தடைகளை தகர்த்தெறிந்து திருமண வாழ்வில் மகிழ்ச்சிகரமாக அடியெடுத்து வைக்கவேண்டும் என வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது
மேலும் படிக்க: ஆறு அடி உயர எருமை வாகனம்.. முறுக்கிய மீசையுடன் எமதர்மராஜா.. ஆடி மாதத்தில் எமனுக்கு பெரும் திருவிழா!
மேலும் படிக்க: ஆடி மாதம் 3வது வெள்ளி: திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மனை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்