மேலும் அறிய

ஆறு அடி உயர எருமை வாகனம்.. முறுக்கிய மீசையுடன் எமதர்மராஜா.. ஆடி மாதத்தில் எமனுக்கு பெரும் திருவிழா!

ஆறு அடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன் பாசக்கயிறு மற்றும் ஓலைச்சுவடி, கதையை தாங்கியபடி கம்பீரமாக எமதர்மராஜா இருக்காரா? இவரை நீதிபதியாக நினைக்கிறீங்களா?

தஞ்சாவூர்: ஆறு அடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன் பாசக்கயிறு மற்றும் ஓலைச்சுவடி, கதையை தாங்கியபடி கம்பீரமாக எமதர்மராஜா இருக்காரா? இவரை நீதிபதியாக நினைக்கிறீங்களா?

ஆமாப்பா ஆமாம். எங்களுக்கெல்லாம் நீதிபதி எமதர்மராஜாதான். தனிக்கோயிலா இருக்கு. அதுவும் 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே கட்டிட்டாங்க தெரியுமா.

இன்னொரு சுவாரஸ்யம் இதோ இருக்கு:

Karuththarajapalayam: கான்க்ரீட் வீடு வேணாம், உசுறுதான் முக்கியம்.. படிகட்டுக்கு நோ, தச்சர்களே இல்லாத கருத்தராஜபாளையம் - சாமி குத்தம்னு பதறும் மக்கள்

அண்ணே... சொல்லுங்கண்ணே எங்கண்ணே இருக்கு இந்த கோயில். சரி தெரிஞ்சுக்குவோம் வாங்க.

ஒரு சில கோவிலில் மட்டும் இருக்கு. மிகவும் சிறியதாக எமதர்மராஜாவுக்கு சன்னதிகள் இருக்கும். ஆனால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் எமதர்மராஜாவுக்கு என்றே தனி கோவில் இருக்கு. இந்த கோவில் 2000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இப்பகுதி மக்கள் தங்களின் இஷ்ட தெய்வமாக, நீதிபதியாக எமதர்மரை வணங்கி வருகின்றனர்.

கோயில் தல வரலாறு என்ன சொல்லுது தெரியுமா! ஒருமுறை பிரகதாம்பாள் என்ற திருநாமத்துடன் அவதரித்த பார்வதிதேவியை சிறு குழந்தையாக எமதர்மனிடம் வழங்கினார் சிவபெருமான். அந்த குழந்தையை பூமிக்கு அழைத்துச் சென்று, பெரியவளாக வளர்ந்ததும் சிவபெருமானுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான் சிவனின் கட்டளை. தனக்கு தலைமையான சிவனின் உத்தரவின் படி பூமிக்கு வந்து சேர்ந்தார் எமதர்மன். வருடங்கள் கடகடவென கடக்க பிரகதாம்பாள், பருவ வயதை எட்டியதும், அவளை சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் முடிவு செய்தனர்.

ஆனால் சிவபெருமானே ஆழ்ந்த தியானத்தில் இருக்க, மன்மதனை அழைத்து வந்து தியானத்தை கலைக்கும்படி செய்ய கடும் கோபத்துடன் கண் விழித்த சிவபெருமான், நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை அழிக்க, ரதிதேவி கலங்கி நின்று வேண்ட,  “இறந்தவர்கள் உயிர் பெறுவதில்லை. இருப்பினும் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மன்மதனுக்காக நடத்தப்படும் திருவிழாவின் போது, உன்னுடைய கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான்” என்று சிவபெருமான் கூறியருளினார்.

ஆறு அடி உயர எருமை வாகனம்.. முறுக்கிய மீசையுடன் எமதர்மராஜா.. ஆடி மாதத்தில் எமனுக்கு பெரும் திருவிழா!

அதன்படி மன்மதனின் உயிரைப் பறிப்பதற்காக எமதர்மராஜன் வந்து இறங்கிய இடம்தான் திருச்சிற்றம்பலம் என்று தல புராணக் கதை சொல்கிறது. இங்குதான் எமதர்ம ராஜாவுக்கு என்று கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கோயில் உள்ளது.

6 அடி உயர எருமை வாகனத்தின் மீது, முறுக்கிய மீசையுடன் பாசக்கயிறு மற்றும் ஓலைச்சுவடி, கதையை தாங்கியபடி கம்பீரமாக எமதர்மராஜன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தினமும் எமகண்ட நேரத்தில், எமதர்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. எமதர்மனை இங்கு வழிபடும் பக்தர்கள், நேருக்கு நேராக நின்று வணங்குவதில்லை. பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப எழுதப்பட்ட கணக்குப்படி, தன்னுடைய நீதியை வழங்கும் இத்தல எமதர்மனை பக்தர்கள் நீதிபதியாகவே கருதி வழிபடுகின்றனர் என்பது மிகவும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இவரை வணங்கினால், நமக்கான நீதி உடனடியாக கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமணம், வளைகாப்பு போன்ற எந்த மங்கல நிகழ்வாக இருந்தாலும், அதற்கான பத்திரிகையை, எமதர்மனின் காலடியில் சமர்ப்பித்து வழிபட்டு வாங்கிச் செல்கின்றனர்.

இந்த ஆலயத்தில் ‘படி கட்டுதல்’ என்ற வழிபாடு பிரசித்தம். நியாயமாக சம்பாதித்து காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்க, அதுபற்றி ஒரு பேப்பரில் எழுதி, எமதர்மனை பூஜித்து இங்குள்ள சூலத்தில் கட்டி விடுகிறார்கள். விரைவிலேயே அதற்கான பலன் கிடைக்கிறது என்கின்றனர். நீதிபதியாக இருந்து எமதர்ம ராஜா தங்களின் பொருட்களை கிடைக்க செய்கிறார் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

நீண்ட ஆயுள் கிடைக்க, மரண பயம் நீங்க, திருமணத் தடை அகல என்று இங்கே வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கையும் ஏராளம்.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அதே போல் மாசி மாதத்திலும் மன்மதனுக்கு திருவிழா எடுக்கிறார்கள். எமதர்மராஜாவை சனிக்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும் என்கிறார்கள்.

சரிங்க இந்த நீதிபதியை பார்க்க, இந்த கோவிலுக்கு எப்படி போகணும். பட்டுக்கோட்டை - அறந்தாங்கி செல்லும் சாலையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்சிற்றம்பலம். இங்குதான் எமதர்மராஜா கோயில் உள்ளது. பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை (ஆவணம் வழியாக) செல்லும் பேருந்துகளில் சென்றால் திருச்சிற்றம்பலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு நடந்து போகலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Embed widget