மேலும் அறிய

Goddess Mahalakshmi: வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு.. இதெல்லாம் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும்!

பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களுக்கு ஆன்மிகத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை நாள் இந்து மதத்தில் லட்சுமி தேவிக்கு என அர்ப்பணிக்கப்பட நாளாகும்.

பொதுவாக எந்த மதமாக இருந்தாலும் அதில் சாஸ்திர, சம்பிரதாய முறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனை நாம் செய்வதன் மூலம் இறைவனின் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார் என்பது ஐதீகமாக உள்ளது. அதேபோல் வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் விரதம், இறை வழிபாடு, தானம் செய்தல் போன்ற விஷயங்களை செய்வது வாழ்க்கையில் பல இன்னல்களை தீர்த்து நன்மைகளை விளையச் செய்யும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அப்படியான வகையில் வெள்ளிக்கிழமை என்பது இந்து மதத்தில் லட்சுமி தேவிக்கு என அர்ப்பணிக்கப்பட நாளாகும்.

பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களுக்கு ஆன்மிகத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை நாளில் மன அமைதி, குடும்ப நல்லிணக்கம், கல்வி வளர்ச்சி மற்றும் நிதி மேம்பாடு போன்ற விஷயங்களை செய்ய சில நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனைப்பற்றி நாம் காணலாம். 

நீங்கள் மற்ற நாட்களைக் காட்டிலும் குறைந்தப்பட்சம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இறை வழிபாடு கண்டிப்பாக நடத்திட வேண்டும் என முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியவை

நமக்கு செல்வ வளம் அருளுவதில் மகாலட்சுமியின் பங்கு அளப்பறியது. ஆனால் அதற்காக மட்டும் மகாலட்சுமியை நாம் வணங்கக்கூடாது. வாழ்க்கையில் அமைதி தொடங்கி மகிழ்ச்சி வரை கிடைக்க மகாலட்சுமியை நாம் வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் வழிபடும்போது ஓம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமஹ  என்ற மந்திரத்தை பக்தியுடன் உச்சரிக்க வேண்டும். இது நம் வீட்டில் இறை உணர்வை அதிகரித்து பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்கும் என சொல்லப்படுகிறது.

அதேபோல் வெள்ளிக்கிழமைகள் நாம் கண்டிப்பாக தானம் செய்வது இரட்டிப்பு பலன்களை தரும் என நம்பப்படுகிறது. குறிப்பாக இனிப்புகள், பால், தயிர், அரிசி, சர்க்கரை, வெள்ளை உணவுப் பொருட்கள் போன்றவற்றை தானம் செய்வது பலன்களை தரும் என நம்பப்படுகிறது. அதாவது அன்றாட தேவைகளுக்கான பொருட்களை தானம் செய்வது குடும்பத்திற்கு செழிப்பையும், இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தரும் என நம்பப்படுகிறது. 

லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமானது ஸ்ரீ யந்திரம் ஆகும். இதனை பசும்பால் கொண்டு கழுவி மஞ்சள் மற்றும் குங்குமப்பூவால் அலங்கரிக்க வேண்டும். இதனை பூஜையறையிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ நிறுவும்போது அது நேர்மறை ஆற்றலை அதிகரித்து செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. 

அதேபோல் வீட்டின் நுழைவு வாயில் லட்சுமி தேவி வாசம் செய்யும் இடமாக உள்ளது. அந்த வாயிலில் வெள்ளிக்கிழமை நாளில் மா இலைகள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். மேலும் கதவு அருகே ஒரு பாத்திரத்தில் உப்பு நிரப்பப்பட்ட நீரை வைத்திருப்பது எதிர்மறை சக்திகளை விரட்டும் என நம்பப்படுகிறது. அதேசமயம் வெள்ளிக்கிழமையில் வீட்டு கதவில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைவது செல்வத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்வதால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget