கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய வைகாசி பிரதோஷ விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்று நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த ஆலயத்தில் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டி, உதிரி பூக்களால் மகா தீபாராதனை காட்டினார்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழா.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்று நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டி, அதைத் தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை காட்டினார். ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.
கரூரில் பெய்த கனமழை - கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலின் உட்பிரகாரத்தில் தேங்கிய மழை நீரால் பக்தர்கள் அவதி
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில், மதியம் முதல் மழை மேகம் சூழ்ந்து மேக மூட்டமாக காணப்பட்டது.
இந்த நிலையில் மாலை 5 மணியளவில் கனமழை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. கரூர் மாநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான புலியூர், மண்மங்களம், பரமத்தி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையின் காரணமாக கரூர் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உட்பிரகாரத்தில் மழை நீர் வழிய துவங்கியது. மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் பக்தர்கள் மழைநீரில் நடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மழைநீர் வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீரை பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.