
ஆன்மீகம்: கரூர் தான்தோன்றிமலை காளியம்மன் ஆலயத் திருத்தேர் பவனி விழா
தான்தோன்றி கிராமம், அருள்மிகு ஊரணி காளியம்மன் ஆலயத்தில் காளியம்மன் திருத்தேர் என்று புறப்பாடு நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் மஞ்சள் நீர் ஊற்றி, தேங்காய் பழம் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.

கரூர் தான்தோன்றிமலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தேர் பவனி விழா சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், தான்தோன்றி கிராமம், அருள்மிகு ஊரணி காளியம்மன் ஆலயத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு காளியம்மன் திருத்தேர் புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் ஆலயத்தில் இருந்து அதிகாலை மேல தாளங்கள் முழங்க ஊரணி காளியம்மன் உருவம் பதித்த பட்டாடையுடன் திருத்தேர் பவனி விழா சிறப்பாக தொடங்கியது. ஒரு பகுதியாக இன்று காலை தான்தோன்றி கிராமம், ஆதி மாரியம்மன் குடித்தெரு பகுதியில் ஊரணி காளியம்மன் திருத்தேர் வந்தது.
அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் காளியம்மன் திருத்தேருக்கு மஞ்சள் நீர் ஊற்றி, தேங்காய் பழம் வைத்து தங்களது நேர்த்திக்கடன் செய்தனர். அங்கிருந்து ஊரணி காளியம்மன் திருத்தேர் அருகிலுள்ள ஊருக்கு சென்றது. தொடர்ந்து இன்று இரவு வரை பல்வேறு ஊர்களில் ஊரணி காளியம்மன் திருத்தேர் பவனி விழா நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக இரவு தான்தோன்றி மலை, முத்து மாரியம்மன் ஆலயத்திற்கு திருத்தேர் வந்தடையும், இன்று முதல் நாள் திருத்தேர் பவனி விழா நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தான்தோன்றி மலை ஊரணி காளியம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

