மேலும் அறிய

Siruvapuri Murugan Temple: கோலாகலமாக நடந்த சிறுவாபுரி முருகன் கோயில் குடமுழுக்கு விழா.. முருக பக்தர்கள் கவனத்துக்கு..

Siruvapuri Murugan Temple: சிறுவாபுரி முருகன் கோயில் கும்பாபிஷேச விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற முருகன் கோயில்.  இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மிகப் பழமையான கோயில் என்ற பல சிறப்புகள் இருந்தாலும், வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலுக்கு வருவதன் மூலம் அமைதியை உணர முடிவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கோயிலின் உள்ளே அமைந்துள்ள உயரமான கொடிமரம் முன் பச்சை மரகத மயிலின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழகு காணும் அனைவரையும் கவர்ந்துவிடும். 

சோழவரம் அருகே அமைந்துள்ள இந்த முருகன் கோயிலுக்கு கடைசியாக 2003 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், சிறுவாபுரி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலாமக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

இந்தக் கோயில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது. 19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழா என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் சிறுவாபுரி நகரமே விழாக் கோலத்தில் காட்சியளித்தது. 

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பதுபோல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே அவருடைய அருள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.

சிறுவாபுரி முருகன் கோயில் சிறப்பு: 

எல்லாருக்கும் வாழ்வில் இருக்கும் பெரிய கனவுகளில் ஒன்று, சொந்த வீடு. நம்மாக ஒரு தனி கூடு. ஆனால், சொந்த வீடு வாங்குவது என்பது எல்லாருக்கும் சாத்தியமாவது அவ்வளவு எளிதானது அல்ல. பணம் நிறைய இருந்தும் சொந்த வீடு கனவு நிறைவேறாமல் இருப்பது வழக்கம் தான். நல்ல இடம் வரட்டும். நல்ல வீட்டாக இருக்கனும். நல்ல சூழல் அமையனும் என்பவை பலரது கனவாகும். இப்படி கனவை நோக்கி பயணிப்பவர்களுக்கு பிடித்துக்கொள்ள துணை நிற்பது தெய்வ சக்திதான்.

இப்படி சொந்த வீடு கனவோடு திரிபவர்களுக்கு உங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்கான சொந்த வீடு கனவை நிறைவேற்றி தருகிறேன் என்று கூறி பக்தர்களை அணைத்துக்கொள்கிறார் சிறுவாபுரி முருகன். 

ஆம். இது பலரும் அறிந்ததே! ஆனால், தெரியாவதர்கள் கவனத்திற்கு. இந்த சிறுவாபுரி முருகன் கோயில் உங்கள் சொந்த வீடு கனவுக்கு துணை நிற்கும்.

 சிறுவாபுரிக்குச் சென்று உள்ளத்தில் உண்மையான கனவோடு, கணிவோடு வணங்கினால், நாம் நினைத்தவைகள்  நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலில் தரிசனம் செய்து திரும்புவர்கள்.  குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்கள் நிஜமாகிய கதைகளை பதிவு செய்ய தவறுவதில்லை. சொந்த வீடு கனவுகள் இருப்பவர்களே சிறுவாபுரி முருகனை தரிசிக்க ஓடோடி வருகின்றனர்.

சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்து, அதன்பின் இடது புறமாக பச்சைபசேல் வயல்வெளிகளைக் கடந்து  3 கிலோ மீட்டர் தொலை  போனால் சிறுவாபுரி முருகன் உங்களுக்கு அன்புடன் காட்சியளிப்பார்.சென்னை, செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர்மற்றும் பொன்னேரி வழியாகவும் முருகனை காண செல்லலாம். 

சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்று பல பெயர்களில் இந்த ஊர் அழைக்கப்படுகிறது. புராண கதைகளின் படி, இராமாயண காலத்தில், இராமருக்கும் அவருடைய மகன்களான லவகுசனுக்கும் போர் நடந்த இடம் சுறுவாபுரிதான் என்றும் கூறப்படுகிறது.

கோயில் சிறப்புகள்:

சிறுவாபுரி கிராமத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது, அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில்.  கோயில் உள் பிரகாரத்தில் கம்பீரமான ராஜ கணபதி, அபீத குஜலாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகார், ஆதிமூலர், நவக்கிரகங்கள் கால பைர்வர், அருணகிரிநாதர், மயூரநாதர் மற்றும் அருணாசலேஸ்வரர் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக்  கொண்டது. கோயிலின் உள்ளே உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர்  திருப்புகழில் சிறுவாபுரி முருகன் திருத்தலம் பற்றி பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.  பால சுப்ரமணிய சுவாமி  நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவது தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதுதான். அதுமட்டுமல்லாமல், வாழ்வின் எல்லா காலத்திலும் உறுதுணையாக இருக்கும் முருகனை தரிவிட்டு சென்றால் எல்லாம் நலமே என்பதால்தான். 

 பால சுப்பிரமணியரைத் தவிர, இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ள எல்லா தெய்வங்களின் சிலைகளும் மரகதப் பச்சைக்கல்லால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழா காலங்களில் இந்த கோயிலில் பிரசிதி பெற்றவை. 

உங்களுக்கும் சொந்த வீடு கனவு நிறைவேறனுமா? சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்க.! உங்கள் கனவு நிஜமாவது நிதர்சனம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget