Beach Wedding : வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்.! பீச்சில் திருமணம் நடத்த சூப்பர் சான்ஸ்- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Beach Wedding : கடற்கரை ஓரங்களில் திருமண நிகழ்வுகள் ஒரு கனவு போன்ற அழகிய அனுபவமாகும். தங்களின் திருமணங்களும் நடத்த முடியாத என ஏங்கி தவிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் திருமணத்தை நடத்தும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மனித வாழ்க்கையில் திருப்புமுனை தான் திருமணம்
திருமணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியமான திருப்புமுனை நிகழ்வு ஆகும். இரு உள்ளங்கள் ஒன்றிணைந்து புதிய இல்லற வாழ்க்கையைத் தொடங்கும் அற்புதமான தருணம் இது. எனவே திருமணங்களை ஆடம்பரமாகவும், கொண்டாட்டமாகவும் நடத்த விரும்புவார்கள். ஆனால் பட்ஜெட் தான் பெரிய அளவில் தடையாக இருக்கும். எனவே அருகில் உள்ள திருமண மண்டபங்களை புக் செய்து திருமண நிகழ்வுகள் நடத்துவார்கள். அதே நேரம் நடிகர், நடிகைகள், விஐபிக்கள் மட்டும் தங்களது திருணங்களை அழகிய கடற்கரை ஓரங்களில் நடத்தி அசத்துவார்கள். இதே போல நமது திருமணங்களும் நடந்த முடியாத ஏங்கி தவித்து வருபவர்களுக்காகவே தமிழக அரசு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை திட்டங்கள்
அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தமிழக சுற்றுலா துறை சார்பாக ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், ராமேஸ்வரம், தஞ்சாவூர் என ஏராளமான ஓட்டல்கள் உள்ளது.மேலும் சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் சுற்றுலா திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில்தான் தமிழகத்தில் சுற்றுலாவை வளர்ச்சி அடைய செய்யும் வகையில் புதிதாக பீச் வெட்டிங் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் படி விவிஐபிக்கள் மட்டும் பீச்சில் திருமணங்கள் நடத்திய நிலையில், தற்போது அழகிய கடற்கரையோரங்களில் திருமணங்களை நடத்த தமிழக சுற்றுலாத்துறை திட்டத்தை அறிவித்துள்ளது.
அழகிய கடற்கரை ஓரங்களில் திருமணம்
கடற்கரை ஓரங்களில் திருமண நிகழ்வுகள் ஒரு கனவு போன்ற அழகிய அனுபவமாகும். கடலின் அலைகள் மென்மையாக முத்தமிடும் மணல் பரப்பில், சூரியன் மறையும் போது வானம் சிவப்பு ஆரஞ்சு நிறங்களால் தீட்டப்படும் அந்த மாலை நேரத்தில், இரு உள்ளங்கள் ஒன்றிணையும் கணம் மறக்க முடியாத மந்திரத் தருணமாக மாறுகிறது. எனவே இது போன்ற இடங்களில் திருமணங்களை நடத்துவது பலரின் கனவாகவே இருக்கும். அந்த வகையில்,
முதல் கட்டமாக சென்னை மகாபலிபுரத்தில் உள்ள சுற்றுலா வளர்ச்சி துறைக்கு சொந்தமான ரிசார்ட்டில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த ரிசார்ட்டில் பீச் வெட்டிங் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடத்துவதற்கு முன்பதிவு கட்டணம் மற்றும் பராமரிப்புக்காக 10 ஆயிரம் ரூபாய் என நிர்யணயிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு- கட்டணம் என்ன.?
மேலும் 22 மணி நேரம் அந்த இடத்தில் தங்குவதற்கு 5ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. முன்பதிவு செய்ய www.ttdconline.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விருப்பத்திற்கேற்ப சைவ மற்றும் அசைவ உணவுகளும் விநியோகிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு நபருகு சைவை உணவிற்கு 700 ரூபாயும், அசைவ உணவிற்கு 1,100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணத்திற்கு தேவையான மேடைகள், அலங்காரங்கள், பூக்கள், விளக்குகள் போன்றவை திருமண வீட்டார் ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழகம் முழுவதும்
தனியார் ரிசார்ட்டுகளைவிட குறைந்த கட்டணத்தில் அழகிய கடற்கரை சூழலை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாமல்லபுரம் தமிழ்நாடு ஹோட்டல் ரிசார்ட் கடற்கரை மணல் வெளியில், திருமண நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்தலாம்.தற்போது மாமல்லபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை விரைவில் விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு நகரங்களுக்கு விரைவில் விரைவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















