![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பஞ்சவடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர திருப்பவித்ரோத்சவ விழா
பஞ்சவடி சேத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் சுவாமி மத்திய திருப்பதி சுவாமியின் திருப்பவித்ரோத்சவ விழா இன்று தொடங்கியது
![பஞ்சவடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர திருப்பவித்ரோத்சவ விழா Panchavadi Anjaneya Temple Tirupavithrotsava ceremony started TNN பஞ்சவடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர திருப்பவித்ரோத்சவ விழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/309a19031e544bceb2a7f743786d997c1691666689739113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் : வானூர் அருகே உள்ள பஞ்சவடி சேத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் சுவாமி மத்திய திருப்பதி சுவாமியின் திருப்பவித்ரோத்சவ விழா இன்று தொடங்கியது.
திருப்பவித்ரோத்சவ விழா
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பஞ்சவடி சேத்திரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவிலில் திருப்பவித்தோற்சவம் இன்று தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருப்பவித்ரோத்சவ விழாவை முன்னிட்டு விழாவை முன்னிட்டு இன்று மாலை அனுக்ஜெ, புண்யாகவாசனம், அங்குராப்பரணம் வாஸ்து சாந்தியுடன் தொடங்கியது.
நாளை காலை பவித்திரமாலைகள் சாற்றுதல், திருவாராதனம், சாற்று முறையுடன் தொடங்கி, தினந்தோறும் திருவாதனம், பூர்ணாஹூதி,மகா சாந்தி ஹோமம் நடைபெற்று 13ம் தேதி காலை சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் திண்டிவனம் சாலையில் பாப்பாஞ்சாவடி என்ற ஊரில்பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 36 அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் ஸ்ரீ மஹா கணபதிக்கும், பட்டாபிஷேக கோலத்தில் ராமருக்கும் தனித்தனி சந்நிதிகள்உள்ளன. கோயில் வளாகத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் 7.5 அடி உயரத்தில், 2 டன் எடையில் செய்யப்பட்ட வெங்கடாசலபதிக்கு தனி சந்நிதி எழுப்பப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பஞ்சவடி கோயில் அமைப்பு :
ராமர், சீதை, இலட்சுமணன், சத்துருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய உயர்தூக்கி இருக்கிறது. இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலிக் கேட்கும். பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு கிலோ எடையுள்ள மிதக்கும் கல்
சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்ற போது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற வானர வீரர்கள் இந்த பாலப்பணியை நடத்தினர். நளன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன் விஸ்வகர்மா தன் மனைவிக்கு, என்னை போலவே உனக்கொரு மகன் பிறப்பான் எனவும் எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும் என்று வரம் கொடுத்தார். இதனால் நளன் தன் தந்தையை போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினார். இவரால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. இந்த மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இந்த கோவிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்த கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி,விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)