கோவிந்தா கோஷம் முழங்க சாமி தரிசனம்; மின்னொளி அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பத்தை வலம் வந்த பெருமாள்
தெப்ப திருவிழாவை காண மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் "கோவிந்தா" கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் அழகர்கோயிலின் உப கோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி தெப்ப உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் போது 108 திவ்யதேசங்களில் ஒன்றான அழகர் மலையிலிருந்து கள்ளழகர் வேடம் தரித்து மதுரையை நோக்கி வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக சுந்தர்ராஜ பெருமாள் வருகை தரும் நிலையில் தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய இந்த கோய்லில் இருந்து தான் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழக வேடம் தரித்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார் இத்தகைய சிறப்பு பெற்ற இந்த ஸ்தலமாகும்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழா. மின்னொளி அலங்காரத்தில் எழுந்தருளி மூன்று முறை தெப்பத்தை வலம் வந்த தால்லாகுளம் பெருமாள் -கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்த மக்கள்
— arunchinna (@arunreporter92) October 8, 2022
| @MaduraiNewsj | @angry_birdu | @AruNSaSHa | @LPRABHAKARANPR3 | pic.twitter.com/Z5i0S7xFNM