மேலும் அறிய

இந்த 5 பொருட்களை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்.. என்ன தெரியுமா?

நிலம் சார்ந்த விஷயமாக பார்க்கப்படும் வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் வைக்கப்படும் பொருட்களாலும் நெகட்டிவ் எண்ணங்கள் பரவ வாய்ப்புள்ளது. சில பொருட்களை வீட்டில் இடம் பெறச் செய்தாலே நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும்

நமது வீட்டில் செல்வ வளம் கொட்ட வேண்டுமென்றால் 5 உயிரினங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அதனைப் பற்றிக் காணலாம். 

வாஸ்து சாஸ்திரம் சொல்வது என்ன?

நிலம் சார்ந்த விஷயமாக பார்க்கப்படும் வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் வைக்கப்படும் பொருட்களாலும் நெகட்டிவ் எண்ணங்கள் பரவ வாய்ப்புள்ளது. இந்த வாஸ்து குறைபாடுகளால் நம் வீட்டில் அல்லது இருக்குமிடத்தில் நிதி சிக்கல் தொடங்கி மன சோர்வு வரை பல பிரச்னைகள் உண்டாகும் என சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை சரியான திசையில் வைத்தால் இந்த பிரச்னைகள் சரியாகும் என சொல்லப்படும் அதே வேளையில் சில பொருட்களை வீட்டில் இடம் பெறச் செய்தாலே நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம். 

வீட்டில் இருக்க வேண்டிய 

  • பொதுவாக வீட்டில் மீன் வளர்ப்பது என்பது நாம் அனைவரும் அழகுக்காக செய்யும் விஷயமாகும். ஆனால் அதன் பின்னால் மிகப்பெரிய வாஸ்து விஷயம் இருக்கிறது. யார் வீட்டில் மீன் தொட்டி அல்லது மீன் படம் இருக்கிறதோ அங்கு அதிர்ஷ்டமும், செழிப்பும் இருக்கும் என்பதற்கான அடையாளமாகும். வீட்டின் வடக்கு அல்லது வட கிழக்கு திசையில் இதனை வைத்தால் மங்களக்கரமானதாக கருதப்படுகிறது. இது பணப்புழக்கத்தை அதிகரித்து வீட்டில் நிலவும் நிதி தொடர்பான சிக்கல்களை தீர்க்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.

  • இந்து மதத்தில் பசுவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பசுவிற்கு உணவு தானம் தொடங்கி நாம் செல்லும் பாதையில் பசு இருந்தால் வணங்கி செல்வது நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது. இத்தகைய புனிதமான விலங்கை நாம் அனைவரும் வீட்டில் வளர்க்க முடியாது என்றாலும் பூஜையறையிலாவது பசுவின் சிலை வாங்கி வைத்து வழிபடலாம். இது செல்வம், அமைதி, இல்வாழ்க்கை மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொடுக்கும் என கூறப்படுகிறது. 
  • குதிரையும் ஆன்மிகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினமாக உள்ளது. ஆனால் நம் அனைவராலும் வீட்டில் அதனை வளர்க்கவோ, வைத்திருக்கவோ முடியாது. எனினும் குதிரை சிலை அல்லது குதிரையில் கடவுள் ஆகியவை இருந்தால் ஆரோக்கியத்துக்கும் உகந்தது என வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது. மேலும் வீட்டில் அமைதி நிலவி நல்வாழ்க்கைக்கான அறிகுறி உண்டாகும். 
  • ஆன்மிகத்தைப் பொறுத்தவரை ஒட்டகம் பொறுமை மற்றும் நிலையான ஒன்றின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் நீண்ட கால பிரச்னைகளுக்கு சரியான முடிவு கிடைக்காமல் அவதிப்படுபவர்கள் வீட்டில் ஒட்டகம் படம் அல்லது சிலையை வைக்கலாம். இது மன உறுதியையும், ஒரு விஷயத்தில் தெளிவான முடிவெடுக்கும் எண்ணத்தையும் ஏற்படுத்தும் என்பது நம்பிக்கையாகும். 
  • செல்வம்,பாதுகாப்பின் சின்னமாக அறியப்படும் யானை சிலையை வீட்டின் நுழைவு வாயிலில் வைப்பது தீய சக்திகளை விலக்கி வைக்கும் என்பது நம்பிக்கையாகும். இதனால் மனத்தூய்மை, அன்பு, இல்வாழ்க்கை ஆகியவற்றில் நன்மை பயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள இந்த தகவலுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. ஏபிபி நாடு இதற்கு பொறுப்பேற்காது)

தலைப்பு செய்திகள்

திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
Embed widget