மேலும் அறிய

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிச்சாண்டவர் சுவாமி திருவீதி உலா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பிச்சாண்டவர் சுவாமி திருவீதி உலா.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பல்வேறு சிவாலயங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலை பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மாலை தொடங்கி இரவு வரை பிச்சாண்டவர் திருவீதி விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு பிச்சாண்டவர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து  மேள தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆலய கிழக்கு வாசல் வழியாக, வடக்கு வாசல், மேற்கு வாசல், தெற்கு வாசல் சென்று அதன் தொடர்ச்சியாக கரூர் மாநகர பகுதிகளில் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் இரவு பிச்சாண்டவர் ஆலயம் குடி புகுந்தார்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிச்சாண்டவர் சுவாமி திருவீதி உலா

ஆலயம் குடி புகுந்த பிச்சாண்டவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் கும்ப ஆலாத்தியுடன் சுவாமியின் திருவீதி உலாவை நிறைவு செய்தனர். தொடர்ந்து குடியிருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பிச்சாண்டவர் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிச்சாண்டவர் திருவீதி உலாவை காண ஏராளமான சிவ பக்தர்கள் ஆலயம் வருகை தந்து ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாயா என்ற கோஷங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறையாகிய பசுபதீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பிச்சாண்டவர் சுவாமிக்கு  சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிச்சாண்டவர் சுவாமி திருவீதி உலா

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தெரிசனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று ஆருத்ரா தெரிசனத்தை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதை தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை பிச்சாண்டவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் உற்சவர் பிரச்சாரண்டவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் ஒன்று கூடி உற்சவர் பிச்சாண்டவர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிச்சாண்டவர் சுவாமி திருவீதி உலா

அதன் தொடர்ச்சியாக பிச்சாண்டவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இன்று மாலை பிச்சாண்டவர் திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற உள்ள என ஆலயத்தின் செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக தெரிவித்துள்ளனர். கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தெரிசனத்தை முன்னிட்டு நடைபெற்ற பிச்சாண்டவர் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
சரியா செஞ்சா தண்டிப்பிங்களா? தமிழக முதல்வருக்கு தெலங்கானாவில் இருந்து வந்த ஆதரவுக்குரல்!
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
போலீஸ் ஸ்டேஷன் அருகே பயங்கரம்! பேருந்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Vijay Fans Shocked: நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
நெஞ்சில் வேறு ஒருவரை குடியேற்றிய விஜய்.. ஷாக்கான தொண்டர்கள்...What Bro.?
Embed widget