1008 லட்டுகளால் நாமாவளிகள் கூறிய சிவாச்சாரியார்.. நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா.
காலை முதல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவு நவநீதகிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக 1008 லட்டுகளால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வாங்கல் சாலையில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் இன்று 1008 லட்டுகளால் நாமாவளி மற்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்.
கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூரில் பிரத்யேகமாக கிருஷ்ணன் ஆலயம் வாங்கல் சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்நிலையில் காலை முதல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இன்று இரவு நவநீதகிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக 1008 லட்டுகளால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது
கரூர் வாங்கல் சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு அலங்காரம் மற்றும் 1008 லட்டு நாமாவளிகள் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கிருஷ்ணனை மனம் உருகி வழிபட்டனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய முனுகூர் ஆரிய வைசிய சமூகத்தின் நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.