மேலும் அறிய

Aadi Month 2024: பிறந்தது ஆடி மாதம்! களைகட்டியது அம்மன் கோயில்கள் - காலை முதலே பக்தர்கள் கூட்டம்

ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்த தமிழ் மாதமாக கருதப்படும் ஆடி மாதம் இன்று பிறந்தது. இதையடுத்து, கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானது. குறிப்பாக, ஆடி மாதத்திற்கு என்று தனிச்சிறப்பு உண்டு. ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் எல்லாம் களைகட்டி காணப்படுகிறது.

பிறந்தது ஆடி:

கடந்த ஒருவார காலமாகவே ஆடி மாத பிறப்பிற்காக களைகட்டி காணப்பட்ட கோயில்களில், இன்று ஆடி மாதம் என்பதால் கோலாகலமாக காணப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களின் தனிச்சிறப்பாக கருதப்படும். ஆடி மாதத்தில் சக்திக்குள் சிவம் அடங்கும் என்று புராணங்களில் கூறப்படுவதால், இந்த மாதம் அம்மனுக்கு மிக மிக உகந்த மாதமாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஆலயங்களில் காலை முதல் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும், வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மேல்மருவத்தூர் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உள்பட அனைத்து அம்மன் கோயில்களிலும் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

களைகட்டும் கோயில்கள்:

பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும் முக்கியமான கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களுக்கும், வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிக்கிருத்திகை நாட்கள் இன்னும் சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தென் தமிழகத்தை காட்டிலும் வட தமிழகத்தில் ஆடி மாதம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் சிறப்பாக காணப்படும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி சனிக்கிழமை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதும், அன்னதானம் வழங்குவதும் காணப்படும்.

பக்தர்கள் பரவசம்:

குறிப்பாக, ஆடி மாதம் என்றாலே கோயில்களில் கூழ் ஊற்றுவது தனிச்சிறப்பாக காணப்படும். இன்று முதல் இந்த மாதத்தின் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த நாட்களிலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் பலரும் மாலை அணிந்து கோயில்களுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Aadi Month 2024: மக்களே.. ஆடி மாதம் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..?

மேலும் படிக்க: 200 ஆண்டுகள் பழமையான மயிலாடுதுறை தோப்பு தெரு திரிசூலி காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இதை பத்தி நீங்க பேசக்கூடாது" விவசாயிகள் குறித்து சர்ச்சை.. கங்கனா ரனாவத்தை லெப்ட் ரைட் வாங்கிய பாஜக!
மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை.. 8 மாதங்களில் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு!
மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை.. 8 மாதங்களில் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு!
நாளை அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்! அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை! நடந்தது என்ன?
நாளை அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்! அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை! நடந்தது என்ன?
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ்க்கு உதவிக்கு வந்த எலான் மஸ்க்..! விண்வெளியிலிருந்து பூமி திரும்புவது எப்படி?, எப்போது?
சுனிதா வில்லியம்ஸ்க்கு உதவிக்கு வந்த எலான் மஸ்க்..! விண்வெளியிலிருந்து பூமி திரும்புவது எப்படி?, எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kolkata doctor case : ”செமினார் ஹால் SECRET” பல்டி அடித்த குற்றவாளி! டாக்டர் கொலையில் ட்விஸ்ட்Namitha Madurai Issue : VCK Ravikumar on DMK | ”திமுகவும் பாஜகவும் ஒன்னு” போட்டுத் தாக்கும் விசிக! தமிழ் கல்வியில் காவியா?”Varunkumar IPS  Profile  | திருச்சியின் எல்லைச்சாமி!சம்பவக்காரன் வருண் IPS..REAL சிங்கம் சூர்யா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இதை பத்தி நீங்க பேசக்கூடாது" விவசாயிகள் குறித்து சர்ச்சை.. கங்கனா ரனாவத்தை லெப்ட் ரைட் வாங்கிய பாஜக!
மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை.. 8 மாதங்களில் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு!
மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை.. 8 மாதங்களில் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு!
நாளை அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்! அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை! நடந்தது என்ன?
நாளை அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்! அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை! நடந்தது என்ன?
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ்க்கு உதவிக்கு வந்த எலான் மஸ்க்..! விண்வெளியிலிருந்து பூமி திரும்புவது எப்படி?, எப்போது?
சுனிதா வில்லியம்ஸ்க்கு உதவிக்கு வந்த எலான் மஸ்க்..! விண்வெளியிலிருந்து பூமி திரும்புவது எப்படி?, எப்போது?
இடைக்கால முதல்வராக துரைமுருகனுக்கு பதவி வழங்க வேண்டும் - சீமான் வேண்டுகோள்
இடைக்கால முதல்வராக துரைமுருகனுக்கு பதவி வழங்க வேண்டும் - சீமான் வேண்டுகோள்
Breaking News LIVE: ”பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது” சிவாஜி சிலை உடைந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றச்சாட்டு..!
”பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது” சிவாஜி சிலை உடைந்ததை சுட்டிக்காட்டி காங்கிரஸ் குற்றச்சாட்டு..!
இபிஎஸ் குறித்து அண்ணாமலை சொன்ன அந்த வார்த்தை;
இபிஎஸ் குறித்து அண்ணாமலை சொன்ன அந்த வார்த்தை; "மரியாதை கொடுக்கணும்" என்ற தமிழிசை
Professors Ban: 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை- அதிரடி அறிவிப்பு
Professors Ban: 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை- அதிரடி அறிவிப்பு
Embed widget