200 ஆண்டுகள் பழமையான மயிலாடுதுறை தோப்பு தெரு திரிசூலி காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் விழா...!
மயிலாடுதுறை தோப்பு தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரிசூலி காளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை திருவிழந்தூர் தோப்பு தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திரிசூலி காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருசூலி மகாகாளியம்மன் ஆலயம்
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் தோப்பு தெருவில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருசூலி மகாகாளியம்மன் ஆலயம். இக்கோயில் அம்மன் திரிசூலமாக இதுநாள்வரை பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். மேலும், வேண்டியவர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அம்மன் என்பதால் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இப்பகுதியில் பலரது குலதெய்வமாகவும் இவ்வாலயம் இருந்து வருகிறது.
Indian 2: இந்தியன் 1 - ஓல்ட் இஸ் கோல்ட் ஸ்டோரி.. சாதனைகளை முறியடிக்குமா 2வது பாகம்?
உருமாறி காளியம்மன்
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி புதிய கோபுரம் அமைக்கப்பட்டு, இதுவரை திரிசூலமாக அருள்பாலித்த காளியம்மனை சிற்ப வடிவமாக அமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்றது. தொடர்ந்து ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமாது இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து யாக சாலையில் புனித நீர் கொண்டு நிரப்பப்பட்ட கடங்கள் வைத்து சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றது.
புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக தினமான இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது மகா பூர்ண குதி செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து கோபுரங்களை வந்தடைந்தனர். பின்பு வேதியர்கள் வேத மந்திரம் ஓத கோயில் கோபுர கலசங்களுக்கு கடங்களில் இருந்த புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.