மேலும் அறிய
Advertisement
Aadi 2023: துவங்கியது ஆடித்திருவிழா ..! ஆடிப்பூர கொடியேற்ற விழா..! பக்தர்கள் மகிழ்ச்சி
Aadi Month 2023 : திருக்கழுக்குன்றம் வேதிகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
திருக்கழுக்குன்றம் வேதிகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது
ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றதில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவில் தலமாக விளங்கும், ஸ்ரீ வேதகிரீஸ்வரர் உடனுறை திருப்பரசுந்தரி அம்மன் கோவிலில் , ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு கோவில் , செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் கோவில் மேலாளர் விஜயன் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் இன்று கோலாகலமாக துவங்கியது.
ஏழாம் நாள் திருத்தேரோட்டம்
12 நாட்கள் நடைபெறும் விழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஏழாம் நாள் திருத்தேரோட்டமும், 10-ஆம் நாள் தீர்த்த வாரியம் , அன்று மாலை திருக்கல்யாணம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் ( thirukalukundram vedhagiriswarar kovil )
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில் 1400 ஆண்டுகால தொன்மை வாய்ந்தது. திருக்கழுக்குன்றம் திருமலைக் கோயிலின் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம், இந்த திருக்கோவில் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த அரசர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இந்த கோவிலும் ஒன்றாக உள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவ தலம் என்பது இக்கோவிலுக்கு கூடுதல் சிறப்பு.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion