மேலும் அறிய
IPL 2021, RCB vs CSK: அனல் பறந்த சிஎஸ்கே - ஆர்சிபி ஆட்டம்.. வெற்றியில் முடிந்த தல - சின்ன தல ஃபினிஷிங் - போட்டோஸ்!

தோனி - ரெய்னா
1/8

சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ஷார்ஜாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.
2/8

ஓப்பனிங் களமிறங்கிய கோலி, படிக்கல் இணை 100 ரன்களுக்கு களத்தில் நின்றது. தொடக்கம் முதலே பவுண்டரிகளை பறக்கவிட்ட இரு வீரர்கள், 11.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி வலுவான இலக்கை எட்டுவதற்கு அடித்தளம் போட்டனர்.
3/8

வேகமாக ரன் சேர்ந்தது போல இருந்த நிலையில், கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. ஏபிடியை தொடர்ந்து படிக்கல், சிங்கப்பூர் டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஹர்ஷல் பட்டேல் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, 200-ஐ எட்டும் என எதிர்ப்பார்க்கபப்ட்ட ஸ்கோர் 156-ல் முடித்து கொண்டது ஆர்சிபி.
4/8

சென்னை அணிக்கு ஓப்பனிங் களமிறங்கிய ருதுராஜ், டுப்ளெசி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பவர் ப்ளேவில் பவுண்டரிகளை அடித்து ரன் சேர்த்தனர். இதனால், 6 ஓவர்கள் முடிவில் 55 ரன்கள் எட்டியிருந்தது சென்னை.
5/8

போட்டியின் 9 & 10-வது ஓவர்களில் அடுத்தடுத்து ருதுராஜ், டுப்ளெசி அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
6/8

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி, 2 சிக்சர்களை அடித்துவிட்டு ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
7/8

போட்டியை முடித்து வைக்கும் பொறுப்பில் ரெய்னாவும், தோனியும் களத்தில் இருந்தனர். தோனி நிதானமாக கூட நிற்க, ரெய்னா ஹசரங்காவின் ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரிகளை அடித்து இலக்கை நெருங்கினார். 18.1 ஓவரில், 4 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி போட்டியை வென்றது. இதனால், 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் சென்னை அணி முதல் இடம் பிடித்துள்ளது.
8/8

இந்த சீசனோடு ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலக உள்ளதால், இரு அணிகளும் ப்ளே ஆஃப் சென்றால், மீண்டும் ஒரு முறை கேப்டன் தோனி vs கேப்டன் கோலியின் ஆட்டத்தை பார்க்கலாம்
Published at : 24 Sep 2021 11:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion