மேலும் அறிய
Virat Kohli pics: கெத்தா, ஸ்டைலாக பயிற்சியில் இணைந்த விராட் கோலி! லேட்டஸ்ட் பிக்ஸ்

விராட் கோலி
1/5

ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோத உள்ளன
2/5

ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தங்களுடைய பயிற்சியை தொடங்கியுள்ளனர். பல்வேறு அணிகளின் வீரர்களும் தங்களுடைய நாடுகளிலிருந்து மும்பை வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.
3/5

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி இணைந்துள்ளார். இது தொடர்பாக அந்த அணி சார்பில் ஒரு ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
4/5

அதில், “கிங் கோலி வந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளது. இந்த ட்வீட் ரசிகர்களிடம் வேகமாக வைரலாகி வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் தொடர் முதல் தற்போது வரை ஒரே அணியில் விளையாடிய வீரர் விராட் கோலி மட்டும் தான்
5/5

இவர் தற்போது வரை 207 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6283 ரன்கள் எடுத்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் 15 போட்டிகளில் 405 ரன்கள் எடுத்திருந்தார். இந்த முறை விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
Published at : 22 Mar 2022 01:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion