மேலும் அறிய
IPL finals 2023 : த்ரில் இருக்கா?..இருக்கி..கப் இருக்கா?..இருக்கி..கடைசி பந்தில் த்ரில் வெற்றிப் பெற்று ஐ.பி.எல் கோப்பைக்கு 5ஆம் முறை முத்தமிட்ட சி.எஸ்.கே!
டி.எல்.எஸ் முறைப்படி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை தகர்த்து 5 ஆவது கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் 16வது தொடரை வென்ற சிஎஸ்கே
1/7

ஐ.பி.எல் 2023இன் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
2/7

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, குஜராத் ஓப்பனர்கள் களமிறங்கி அதிரடியாக விளையாடினார்கள்.
3/7

தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் சிக்கி 39 ரன்களுடன் வெளியேறினார், சுப்மன் கில். அடுத்ததாக களமிறங்கிய தமிழக வீரரான சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 96 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்திருந்தது குஜராத் அணி.
4/7

இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்திலே மழை பெய்ய, ஆட்டம் டி.எல்.எஸ் முறைக்கு மாற்றப்பட்டு சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
5/7

பிறகு களமிறங்கிய சென்னை ஓப்பனர்கள் கணிசமான ரன்களுடன் வெளியேற, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, ஜடேஜா என அவரவர் பங்குக்கு அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
6/7

இறுதியாக சென்னை அணிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்று தந்தார் ஜடேஜா.
7/7

இதன் மூலம் சென்னை அணி 5 ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
Published at : 30 May 2023 11:06 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement