மேலும் அறிய
CSK vs LSG : மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்கும் சிங்கங்கள்..விருந்தளிக்குமா சென்னை அணி?
சென்னை அணியை எம்.எஸ்.தோனியும் லக்னோ அணியை கே.எல்.ராகுலும் வழிநடத்த, இன்று நடைப்பெறும் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
சிஎஸ்கே vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
1/6

ஐ.பி.எலின் 16 வது சீசன் கடந்த 31 ஆம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின.
2/6

அன்று சென்னை அணியின் மோசமான பந்து வீச்சின் காரணமாக குஜராத் அணி வெற்றி பெற்றது.
3/6

பிறகு ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெற்ற லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
4/6

இந்நிலையில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. சென்னை அணியை எம்.எஸ்.தோனியும் லக்னோ அணியை கே.எல்.ராகுலும் வழிநடத்த, இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
5/6

மேலும் சென்னை அணி, சென்னை மெட்ரோ உடன் இணைந்து இப்போட்டியை காண வரும் ரசிகர்கள் போட்டியின் டிக்கெட் வைத்து மெட்ரோவில் இலவச பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. போட்டி முடிந்த 1 மணி நேரத்திற்கு பிறகும் மெட்ரோ இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/6

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் போட்டியில் சென்னை அணியின் வெற்றியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Published at : 03 Apr 2023 06:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















