Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
பொங்கல் பண்டிகை நாளிலும் விலை உயர்ந்து, ஏறுமுகத்தில் இருந்த தங்கம், இன்று சற்று விலை குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். வெள்ளி விலையும் குறைந்த நிலையில், இன்றைய விலை நிலவரத்தை பார்ப்போம்.

சென்னையில், ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நேற்று பொங்கல் நாளிலும் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், இன்றும் விலை கூடுமோ என்று பொதுமக்கள் நினைத்திருந்த நேரத்தில், விலை சற்று குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்க்கலாம்.
ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று குறைந்தது
இந்த வாரத்தின் முதல் நாளான 12-ம் தேதி விலை உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 13,120 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,04,960 ரூபாய் என்ற புதிய உச்ச விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 13-ம் தேதி மேலும் விலை உயர்ந்து, புதிய வரலாற்று உச்ச விலையை அடைந்தது. அதன்படி, கிராமிற்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,05,360 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், 14-ம் தேதி கிராமிற்கு 110 ரூபாயும், சவரனுக்கு 880 ரூபாயும் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. அதன்படி, ஒரு கிராம் 13,280 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,240 ரூபாய் என்ற வரலாற்று புதிய உச்ச விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகை நாளான 15-ம் தேதி, அதாவது நேற்று, மேலும் விலை உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 13,290 என்ற உச்ச விலையையும், ஒரு சவரன் தங்கம் வரலாற்று உச்ச விலையாக, 1,06,320 ரூபாயை எட்டியது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
இப்படிப்பட்ட சூழலில், ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று சற்று விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 60 ரூபாய் விலை குறைந்த தங்கம், ஒரு கிராம் 13,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 1,05,840 ருபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்தது
இந்த வாரத்தின் முதல் நாளான 12-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 12 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 287 ரூபாயாக உச்சம் தொட்டது. இந்நிலையில், 13-ம் தேதியான நேற்று கிராமிற்கு மேலும் 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 292 ரூபாய் என்ற உச்ச விலையை எட்டியது.
இந்த சூழலில், 14-ம் தேதி கிராமிற்கு மேலும் 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 307 ரூபாய் என்ற வரலாற்று உச்ச விலையை அடைந்தது. தொடர்ந்து, 15-ம் தேதியான நேற்றும் விலை உயர்நது, புதிய உச்ச விலையாக, ஒரு கிராம் 310 ரூபாய்கு எகிறிது.
இந்நிலையில், இன்று கிராமிற்கு 4 ரூபாய் குறைந்துள்ள வெள்ளி, ஒரு கிராம் 306 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ள நிலையில், தொடர்ந்து விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















