Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar Campa AD: சொந்த படங்களின் நிகழ்ச்சியிலேயே பங்கேற்காதா அஜித்குமார், குளிர்பான நிறுவனத்தின் விளம்பத்தில் நடித்து இருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Ajith Kumar Campa AD: சொந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிக்க முடிந்த அஜித்குமாரால், 150 கோடி பெறும் படத்திற்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதா? என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
எளிமையின் உருவமாக அஜித்..
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் அஜித்குமாரும் ஒருவர். சொந்த படத்தை ப்ரமோட் செய்வதற்கு கூட எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காவிட்டாலும், அவரது எளிமைக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கிறார். தனது ரசிகர்களுக்கு ஒரு சரியான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் அஜித், அனைவரும் தங்களது சொந்தவாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என அவ்வப்போது அறிவுரைகளையும் வழங்குவார். விளம்பரப் படங்களில் நடிப்பதை கூட தவிர்த்து வருகிறார். அதேநேரம், அஜித்குமார் எப்போதாவது பொதுநிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டாரா? அவரை நேரில் கண்டுவிடமாட்டோமா? என பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ப்ரமோஷனுக்கு நோ சொல்லும் அஜித்..
அதிகாரப்பூர்வ தகவல் இல்லாவிட்டாலும், இன்றைய சூழலில் அஜித்குமாருக்கு ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாய் வரையில் ஊதியம் வழங்குவதாக கூறப்படுகிறது. வழக்கமாக நடிகர்கள் தங்களது படத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்க, வெளியீட்டிற்கு முன்னதாக ஏராளமான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். வணிக ரீதியில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரங்களாக திகழும் ரஜினி மற்றும் விஜய் ஆகியோர், இசைவெளியீட்டு விழா போன்ற பல ப்ரமோஷன்களில் பங்கேற்பார்கள். ஆனால் அவர்களுக்கு அடுத்தகட்ட இடத்தில் உள்ள அஜித், தனது சொந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கூட பங்கேற்கமாட்டார். ஒரு நல்ல படத்திற்கான விளம்பரம் அதுவே உருவாக்கிக் கொள்ளும் என்ற பாணியில், நடித்து முடித்ததும் படத்துடனான தனது உறவை முறித்துக் கொள்வதே அஜித்தின் வாடிக்கையாக உள்ளது.
குளிர்பான விளம்பரத்தில் அஜித்குமார்..
இந்த சூழலில் தான் கார் ரேஸிங் அணி ஒன்றை அஜித்குமார் சொந்தமாக உருவாக்கியுள்ளார். அதில் தனியார் குளிர்பான நிறுவனம் ஒன்று முதலீடு செய்துள்ளது. அதன் விளம்பரத்தில் நடித்து இருப்பது தான் இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஒரு சிலர் இந்த விளம்பரத்தை கண்டு ஆச்சரியம் அடைந்து இருக்க, ஒரு சிலர் அஜித் இப்படி செய்யலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக பொறுப்புடன் செயல்படக்கூடிய அஜித் இப்படி ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடிக்கலாமா? எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ப்ரொடியூசர் இளிச்சவாயனா?
சொந்த கொள்கைகளை விடுத்து தனியார் நிறுவன பொருட்களுக்காக விளம்பரம் செய்துள்ள அஜித்குமாரை நோக்கி நெட்டிசன்கள் பல கேள்விளை எழுப்பியுள்ளனர். அதன்படி, “சொந்த நிறுவனத்தின் வருமானத்தை பெருக்குவதற்காக, ஆரோக்கியமற்ற குளிர்பான விளம்பரத்தில் நடிப்பது தான் உங்களது பொறுப்பான செயல்பாடா? உங்களை நம்பி 150 கோடி ரூபாய் வரை ஊதியத்தை கொட்டி கொடுத்தால், அந்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டேன் என ரூல்ஸ் போட்டுவிட்டு, இன்று உங்களது சொந்த நிறுவனம் உங்களது சொந்த பணம் என்றதுமே கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டீர்களா?” என சாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் நிலவும் மோசமான ரசிகர்கள் கலாச்சாரத்திற்கு மத்தியில், ஒரு நல்ல படத்தை எடுப்பதை தாண்டி அதனை அனைத்து தரப்பினருடமும் கொண்டுபோய் சேர்ப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதையனைத்தும் அறிந்திருந்தும் உங்களது ஒத்துழைப்பை வழங்காமல் இருந்துவிட்டு, இன்று உங்கள் நிறுவனம் என்றதுமே பேட்டிகளை அளிப்பது, செய்தியாளர்களை சந்திப்பது மற்றும் விளம்பரங்களில் நடிப்பது போன்ர அனைத்தையும் செய்வது நியாயமா? என்பதே திரைத்துறையினரின் ஆச்சரியம் நிறைந்த கேள்வியாக உள்ளது.























