மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Oats Idly : சத்துகளை அள்ளி வழங்கும் ஓட்ஸ் இட்லி..இன்றே செய்து அசத்துங்கள்!
Oats Idly : ஒரே இட்லி சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா..? இந்த சுவையான சத்துகள் நிறைந்த ஓட்ஸ் இட்லியை செய்து அசத்துங்கள்.
![Oats Idly : ஒரே இட்லி சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா..? இந்த சுவையான சத்துகள் நிறைந்த ஓட்ஸ் இட்லியை செய்து அசத்துங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/72570c1af325f150e593b182ddd2f8eb1712340457376501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஓட்ஸ் இட்லி
1/6
![தேவையான பொருட்கள் : ரோல்டு ஓட்ஸ் - 1 கப், அடித்த கெட்டி தயிர் - 200 கிராம், வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 பெரிய துண்டு நறுக்கியது, கேரட் - 1 துருவியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/38f32dad7c110988e3ae44a6a59f81539c343.png?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : ரோல்டு ஓட்ஸ் - 1 கப், அடித்த கெட்டி தயிர் - 200 கிராம், வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 பெரிய துண்டு நறுக்கியது, கேரட் - 1 துருவியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி.
2/6
![செய்முறை : முதலில் மிக்ஸியில் ஓட்ஸ்'ஸை கொர கொரப்பாக அரைக்கவும். அரைத்த ஓட்ஸ் உடன், முழு ஓட்ஸ்'ஸையும் சேர்த்து எடுத்து வைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/df531f9cd9ff27863951a29bf947e34b5b906.png?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : முதலில் மிக்ஸியில் ஓட்ஸ்'ஸை கொர கொரப்பாக அரைக்கவும். அரைத்த ஓட்ஸ் உடன், முழு ஓட்ஸ்'ஸையும் சேர்த்து எடுத்து வைக்கவும்.
3/6
![கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க அரம்பித்ததும், இதில் பெருங்காயம், பெரிய வெங்காயம், கறிவேப்பில்லை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/01c89563bf64bb3580fc756fbfcb821c04d6f.png?impolicy=abp_cdn&imwidth=720)
கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க அரம்பித்ததும், இதில் பெருங்காயம், பெரிய வெங்காயம், கறிவேப்பில்லை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும்.
4/6
![வெங்காயம் பாதி வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறிய வெங்காய கலவையை ஓட்ஸ்'ஸில் போடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/54239f44c7cf9e7d5c54f092c5ddac9a84967.png?impolicy=abp_cdn&imwidth=720)
வெங்காயம் பாதி வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஆறிய வெங்காய கலவையை ஓட்ஸ்'ஸில் போடவும்.
5/6
![இதனுடன், துருவிய கேரட், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து கலக்கவும். அடுத்து இதில் அடித்த கெட்டி தயிர் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/b17e59ba842b434e4a5b17c0a6704e4b8a48f.png?impolicy=abp_cdn&imwidth=720)
இதனுடன், துருவிய கேரட், கொத்தமல்லி இலை, உப்பு சேர்த்து கலக்கவும். அடுத்து இதில் அடித்த கெட்டி தயிர் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
6/6
![இட்லி பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, இட்லி தட்டில் எண்ணெய் தடவி, செய்த ஓட்ஸ் கலவையை வைத்து, 15 நிமிடம் வேகவைக்கவும். அவ்வளவு தான் ஓட்ஸ் இட்லி தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/6e51725c4958c94e2ef5ba7f93ed298babcc7.png?impolicy=abp_cdn&imwidth=720)
இட்லி பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, இட்லி தட்டில் எண்ணெய் தடவி, செய்த ஓட்ஸ் கலவையை வைத்து, 15 நிமிடம் வேகவைக்கவும். அவ்வளவு தான் ஓட்ஸ் இட்லி தயார்.
Published at : 05 Apr 2024 11:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion