மேலும் அறிய
Motion Sickness : பயணம் செய்யும் போது குமட்டல் வராமல் தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க!
Motion Sickness : பயணம் செய்யும் போது குமட்டல், வாந்தி ஏற்படுவதற்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் இந்த பதிவில் காணலாம்.
பயணத்தின் போது ஏற்படும் குமட்டல்
1/6

காரிலோ, பேருந்திலோ நெடுந்தூரம் பயணம் செய்தால் சிலருக்கு குமட்டல், வாந்தி ஏற்படும். இந்த நிலையை ஆங்கிலத்தில் "மோஷன் சிக்னஸ்" (Motion Sickness) என அழைக்கிறார்கள்.
2/6

உள் காது, நம் உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. சிலருக்கு சில சமயங்களில் இதில் பிரச்சினை ஏற்படும். இந்த உள் காது ஒருவிதமான சிக்னலை மூளைக்கு கொடுக்கும். அவர்களின் கண், கை, கால் வேறுவிதமான சிக்னலை கொடுக்கும். குழப்பம் அடைந்த மூளை குமட்டல் உணர்வை ஏற்படுத்தும்.
3/6

இந்த பிரச்சினையை தவிர்க்க, முன் சீட்டில் அமர்ந்து பயணம் செய்யலாம். முன்னே பார்த்து உட்கார வேண்டும். பின்னே பார்த்து உட்கார கூடாது.
4/6

கதவுகளை திறந்துவிட்டு தூரமாக இருப்பவற்றை வேடிக்கை பார்த்து வரலாம். எலுமிச்சையின் வாடை இந்த குமட்டல் உணர்வை போக்க உதவும். அதனால் பயணத்தின் போது எலுமிச்சையை எடுத்து செல்லலாம். சூயிங் கம்மை மென்று சாப்பிடலாம்.
5/6

இது எதுவும் உதவவில்லை என்றால் தூங்கி விடுங்கள். தூக்கமும் வரவில்லை என்றால், பயணத்தின் முன்னரே மருந்து மாத்திரைகளை வாங்கி கொள்ளவும். வெவ்வேறு வகைகளில் கிடைக்கும் (Labyrinthine Sedatives) என அழைக்கப்படும் இதை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளலாம்.
6/6

பயணத்தின் போது அதிக எண்ணெய் உள்ள உணவுகளை தவிர்த்துவிட்டு எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, சாதம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
Published at : 09 Jun 2024 12:33 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கிரிக்கெட்
வணிகம்





















