மேலும் அறிய
Jackfruit Seed Fry : சூப்பர் காம்போ.. பலாக்கொட்டை வறுவல் ரெசிபி செய்முறை!
Jackfruit seed fry : பலாக்கொட்டை வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
![Jackfruit seed fry : பலாக்கொட்டை வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/04/797953b684ba31922dbd8ec12987fd941714824278397571_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
பலாக்கொட்டை வறுவல்
1/6
![கடாயில் இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை மீடியம் சைஸில் ஒரு துண்டு, 4 கிராம்பு, ஒரு அன்னாசி பூ, சோம்பு அரை ஸ்பூன் சேர்த்து 30 நொடிகள் வதக்கி விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/04/cfd0137b066fabc403c38130b0354f1e22736.png?impolicy=abp_cdn&imwidth=720)
கடாயில் இரண்டு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை மீடியம் சைஸில் ஒரு துண்டு, 4 கிராம்பு, ஒரு அன்னாசி பூ, சோம்பு அரை ஸ்பூன் சேர்த்து 30 நொடிகள் வதக்கி விடவும்.
2/6
![பின் இதில் பொடியாக நறுக்கிய இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கி வதங்கியதும், நறுக்கிய ஒரு பெரிய சைஸ் தக்காளி சேர்த்து, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/04/81dffac299a71662d640645df3ce4eb3e99ba.png?impolicy=abp_cdn&imwidth=720)
பின் இதில் பொடியாக நறுக்கிய இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கி வதங்கியதும், நறுக்கிய ஒரு பெரிய சைஸ் தக்காளி சேர்த்து, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3/6
![இஞ்சியின் பச்சை வாசம் போனதும் கால் கிலோ அளவு நறுக்கிய பலாக்கொட்டையை சேர்க்கவும். இதை எண்ணெயில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு, இதில் இரண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/04/49f294a00297c3d71215bd968f29d75615f72.png?impolicy=abp_cdn&imwidth=720)
இஞ்சியின் பச்சை வாசம் போனதும் கால் கிலோ அளவு நறுக்கிய பலாக்கொட்டையை சேர்க்கவும். இதை எண்ணெயில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு, இதில் இரண்டு ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் சேர்க்கவும்.
4/6
![கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பையும் இதனுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட்டு இதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/04/5a826cc47451a9605c487b00e61fbefaf2f77.png?impolicy=abp_cdn&imwidth=720)
கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பையும் இதனுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். மசாலாவின் பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட்டு இதில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
5/6
![5 நிமிடத்திற்கு ஒரு முறை இதை திறந்து கிளறி விட்டு மீண்டும் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/04/d78c4860683eb73aab49b1361c069bd5235b2.png?impolicy=abp_cdn&imwidth=720)
5 நிமிடத்திற்கு ஒரு முறை இதை திறந்து கிளறி விட்டு மீண்டும் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
6/6
![பலாக்கொட்டை வெந்து தண்ணீர் வற்றியதும் உப்பை சரிபார்த்து விட்டு, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தழை தூவி இறக்கி கொள்ளலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/04/108adb7580735496549520e699e450e8fd255.png?impolicy=abp_cdn&imwidth=720)
பலாக்கொட்டை வெந்து தண்ணீர் வற்றியதும் உப்பை சரிபார்த்து விட்டு, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை தழை தூவி இறக்கி கொள்ளலாம்.
Published at : 04 May 2024 06:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion