மேலும் அறிய
இனிப்பு உணவுகள் அதிகமாக சாப்பிடுவதை தடுப்பது எப்படி?ஆயுர்வேத நிபுணரின் பரிந்துரைகள்!
Sugar Cravings: சர்க்கரை அதிக இருக்கும் உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று நிபுணர்களின் விளக்கத்தை இங்கே காணலாம்.

இனிப்பு வகைகள்
1/6

சிலர் ஸ்வீட் டூத். இனிப்பு பிரியர்கள் வாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது இனிப்பு சாப்பிட்டுவிட வேண்டும் என்றிருப்பார்கள். ஆனால், அதிகளவு இனிப்பு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
2/6

உணவை நன்றாக சுவைத்து சாப்பிடுவது ரொம்பவே முக்கியம். வாயில் சுரக்கும் ‘Amylase' என்ற உமிழ்நீர் உணவை நன்றாக மென்று சாப்பிடும்போது உணவில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போ-ஹைட்ரேட்டை சிறிய துண்டுகளாக மாற்றிவிடும்.
3/6

உணவை நன்றாக மென்று திண்பது செரிமானத்திற்கு உதவுவதுடன், அது இனிப்பு சுவையாக மாறிவிடும். நன்றாக மென்றுவிட்டால் செரிமான மண்டலத்தின் வேலை என்பது எளிதானதாகிவிடும்.அதோடு, உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படும். இதனால் நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாது. சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.
4/6

’இனி சர்க்கரையே சாப்பிட கூடாது.’ என்ற இலக்கை நிர்ணயிக்காமல் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யலாம். ஏனெனில், சர்க்கரை சாப்பிடுவதை விட முடியவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விடுபடலாம். இனிப்பு சாப்பிடுவதிலும் உங்களால் முயன்ற அளவிற்கான இலக்கை நிர்ணயிக்கலாம். இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் கொஞ்சமாக சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.
5/6

நிதானமாக என்ன சாப்பிடுகிறோம் என்பதை கவனித்து சாப்பிட்டால், சுவை தெரியும். அப்போது உங்களுக்கு உணவு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இது அடிக்கடி ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தாது.
6/6

பண்டிகை காலம் என்றாலும் ஊட்டச்சத்து மிகுந்த இனிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லது. காய்கறி, இறைச்சி என சத்தான உணவுகளையும் உடற்பயிற்சியும் உடல்நலனை ஆரோக்கியத்துடன் பாதுகாக்க உதவும். சர்க்கரை பயன்படுத்தி இனிப்பு வகைகள் செய்வதை தவிர்க்கலாம்.
Published at : 15 Sep 2024 11:34 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion