மேலும் அறிய
Ice Cream Benefits : ஐஸ்கிரீம் கெட்டதுனு யார் சொன்னா? அதுல நல்லதும் இருக்கு!
Ice Cream Benefits : கோடை காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

ஐஸ்கிரீம்
1/6

கோடை காலம் வந்தாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவார்கள். வெயிலுக்கு இதமாக இருக்கும் இது சுவையாகவும் இருக்கும். சில பெற்றோர்கள், குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்க மாட்டார்கள். சளி, காய்ச்சல் வந்துவிடும், அது உடலுக்கு நல்லதல்ல என அதை தவிர்த்து விடுவார்கள்.
2/6

பதப்படுத்தப்படாமல் பிரெஷ்ஷாக செய்யப்படும் ஐஸ்கிரீமில், உடலுக்கு தேவையான கால்சியம், புரதம், வைட்டமின்ஸ் நிறைந்து இருக்கும். ஒரு கப் ஐஸ்கிரீம் சாப்பிட்டால், நல்ல ஒரு ஃபீல் கிடைக்கும். மன அழுத்தம், மன சோர்வு குறைந்து ஒரு விதமான புத்துணர்ச்சி கிடைக்கும்.
3/6

ஐஸ்கிரீமில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு, உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். தொண்டை தண்ணீர் வற்றி போகும் இந்த கோடை காலத்தில், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.
4/6

இதில் உள்ள நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தேவையற்ற பசி ஏற்படாது. இதனால் தேவையில்லாமல் சாப்பிட மாட்டோம். ஆக, உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
5/6

உடற்பயிற்சி செய்த பின், உடல் சோர்வாக இருக்கும். அப்போது ஐஸ்கிரீம் சாப்பிடலாம். இதில் இருக்கும் கொழுப்புகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். சில ஐஸ்கிரீம் வகைகளில் குடலுக்கு நல்லது செய்யும் ப்ரோபயாடிக்ஸ் இருக்கும். இது ஜீரண ஆற்றலை மேம்படுத்தும்.
6/6

பிடித்தவர்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டால், பிணைப்பு ஏற்படும். அத்துடன் நீங்கா நினைவுகளும் கிடைக்கும். வீட்டில் செய்த ஐஸ்கிரீம், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லாத ஐஸ்கிரீமை அளவாக சாப்பிடலாம். சளி, காய்ச்சல் வராமல் இருக்கு, ஐஸ்கிரீம் சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து சூடான தண்ணீர் பருகவும். இது தொண்டையில் சேரும் வைரஸ்களை கொள்ள உதவும்.
Published at : 12 Apr 2024 11:32 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion