மேலும் அறிய
Potato Rice : புளி சாதம், லெமன் சாதம் போர் அடிச்சிடுச்சா? சூப்பரான வெரைட்டி ரைஸ் ரெசிபி இதோ!
Potato Rice : அப்பளம், வத்தல், காலிஃபிளவர் 65 வைத்து இந்த ருசியான உருளைக்கிழங்கு சாதத்தை சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

உருளைக்கிழங்கு சாதம்
1/6

தேவையான பொருட்கள்: உருளைகிழங்கு - 2 , உப்பு , கறிவேப்பிலை , வெள்ளை சாதம் , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி , கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , மிளகு - 1 தேக்கரண்டி , சிவப்பு மிளகாய் -7 , மல்லி விதை - 2 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, புளி.
2/6

நல்லலெண்ணெய் - 1 மேசைக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் -2 , பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
3/6

செய்முறை: முதலில் கடாயில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சிவப்பு மிளகாய், மல்லி விதை, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, சிறிது நேரம் ஆறவிட்டு வைத்து எடுத்துக் கொள்ளவும்.
4/6

அடுத்தது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5/6

அதன் பின் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை சேர்த்து கிளறி விடவும்.
6/6

அடுத்தது இந்த மசாலா கலவையில் வேகவைத்த சாதத்தை சேர்த்து மசாலாவோடு நன்கு கிளறினால் சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்.
Published at : 09 Aug 2024 10:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion