மேலும் அறிய
Palak Keerai Rice: ஊட்டச்சத்து நிறைந்த பாலக்கீரை சாதம் - ரெசிபி இதோ!
Palak Keerai Rice: லஞ்ச் பாக்ஸ் சாப்பாடுக்கு என்ன செய்றதுன்னு இனி யோசனை வேண்டாம். பாலக்கீரை சாதம் சாப்பிட்டு பாருங்க.

பாலக்கீரை சாதம்
1/6

இதை சாதாரண அரிசியிலும் செய்யலமாம். பாஸ்மதி அரிசி பயன்படுத்தியும் செய்யலாம். பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தை எடுத்து கொதிக்க வைக்கவும்
2/6

ஊறவைத்த அரிசி மற்றும் உப்பு சேர்க்கவும். அரிசியை முழுமையாக சமைத்து, வடிகட்டி, தனியாக வைக்கவும்.
3/6

பாலக்கீரை இலைகளை கழுவி நறுக்கவும். அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் பூண்டு பற்கள், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். ஒரு அகன்ற கடாயை எடுத்து எண்ணெய், நெய் சேர்க்கவும்.பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
4/6

கீறிய பச்சை மிளகாயை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும். கடாயில், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். பாலக்கீரை விழுது சேர்த்து 10 நிமிடம் சமைக்கவும்.
5/6

10 நிமிடம் கழித்து கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பாலக் மசாலாவுடன் சாதத்தை சேர்த்து மெதுவாக கலக்கவும். வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.
6/6

சுவையான மற்றும் ஆரோக்கியமான பாலக்கீரை சாதம் சூடாக பரிமாற தயாராக உள்ளது.
Published at : 15 May 2024 01:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement