DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுக அதிருப்தியில் இருக்கும் தேமுதிக, திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாகவும், அதற்காக திமுக சில ஆஃபர்களை கொடுத்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அதிமுக, பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது அதிமுகவுடன் பாஜக, தமாக, புதிய நீதிகட்சி, ஐஜேகே கட்சிகள் இருக்கின்றன. மற்றொரு பக்கம் பாமகவையும் தேமுதிகவையும் கூட்டணி பக்கம் இழுப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால் ராஜ்யசபா சீட் தங்கள் கட்சிக்கு வழங்குவதாக வாக்குறுதி கொடுத்த அதிமுக ஏமாற்றிவிட்டதாக அதிமுக அதிருப்தியில் இருக்கிறது.
இதனையடுத்து அதிமுக தேமுதிகவை சமாதானம் செய்யும் வகையில் தமிழகத்தில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு இடம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் தற்போது வரை அதிமுக கூட்டணியில் தொடர்வதாக எந்த அறிவிப்பையும் தேமுதிக அறிவிக்கவில்லை. வருகிற ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் திமுகவும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கின்றனர். அந்த வகையில் திமுக தலைமையிடத்தில் நெருங்கிய தொடர்பில் உள்ள அமைச்சர் ஒருவர் தேமுதிக தலைமையிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ராஜ்யசபா சீட் வழங்குவதாக உறுதி அளித்த அவர், திமுக கூட்டணியில் 4 முதல் 5 தொகுதிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தென் மற்றும் வட மாவட்டங்களில் வெற்றி வாய்புள்ள தொகுதியையும் தேமுதிகவிற்கு ஆப்பர் வழங்கியுள்ளது திமுக
அதேபோல் தேமுதிக நிர்வாகியான விஜய பிரபாகரனும் திமுக கூட்டணிக்கு செல்லவே விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் கடந்த சில மாதங்களாகவே திமுக ஆட்சியை விமர்சிக்காமல் பிரேமலதா அமைதி காத்து வருகிறார். இதன் பின்னணியிலும் கூட்டணிக்கான கணக்குகளே இருப்பதாக தெரிகிறது. ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக மாநாட்டில் யாருடன் கூட்டணி வைக்கப் போவதாக அறிவிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.





















