மேலும் அறிய
Mint Chutney:சுவையான, கார சாரமான புதினா சட்னி செய்வது எப்படி ?
Mint Chutney: இந்த காரசாரமான புதினா சட்னியை இட்லி, தோசை மற்றும் சாதத்தில் கூட பிசைந்து சாப்பிடலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

கார சாரமான புதினா சட்னி
1/6

தேவையான பொருட்கள்: எண்ணெய் - 2 தேக்கரண்டி , கடலை பருப்பு - 2 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி , பூண்டு - 5 பற்கள் , இஞ்சி - 1 துண்டு நறுக்கியது , புளி, சிவப்பு மிளகாய் - 5தேங்காய் - 1/2 கப், கறிவேப்பிலை - 1/2 கப், புதினா இலை - 2 கட்டு , கல் உப்பு, பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி , எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி , சீரகம் - 1/2 தேக்கரண்டி , சிவப்பு மிளகாய் - 1 , கறிவேப்பிலை
2/6

செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
3/6

அதன் பிறகு பூண்டு, நறுக்கிய இஞ்சி, புளி துண்டுகள், சிவப்பு மிளகாய் மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து மீதமான சூட்டில் 3 நிமிடம் வதக்கவும்.
4/6

அதன் பிறகு கருவேப்பிலை மற்றும் புதினா இலை சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கவும். அடுத்தது கல் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து புதினா இலை சுருங்கும் வரை காத்திருக்கவும்.
5/6

புதினா இலை சுருங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கி 30 நிமிடத்திற்கு ஆறவிடவும். அதன் பிறகு மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
6/6

அடுத்தது, ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால் சுவையான ஸ்பைசி புதினா சட்னி தயார்.
Published at : 14 Jul 2024 12:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement