மேலும் அறிய
Chapati Kothu : சுவையான முட்டை சப்பாத்தி கொத்து செய்வது எப்படி?
Chapati Kothu : குழந்தைகளுக்கு சாதாரண சப்பாத்தி செஞ்சி கொடுப்பதை விட, இந்த மாதிரி கொத்து சப்பாத்தி செஞ்சி கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.

சப்பாத்தி கொத்து
1/6

தேவையான பொருட்கள் : எண்ணெய், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் - 1 , பச்சை மிளகாய் - 2 , இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 தேக்கரண்டி, தக்காளி - 2 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, உப்பு, முட்டை - 5 , கொத்தமல்லி இலைகள், மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
2/6

செய்முறை : முதலில் சப்பாத்தியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்தது, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
3/6

அடுத்தது, பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பிறகு இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
4/6

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும். அதன் பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும். அதன் பிறகு கொத்தமல்லி இலை மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
5/6

முட்டை பாதி வெந்த நிலையில், நறுக்கி வைத்துள்ள சப்பாத்தி துண்டுகளை சேர்த்து முட்டையுடன் நன்கு கிளறவும்.
6/6

சப்பாத்தி முட்டையுடன் சேர்த்த உடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான முட்டை சப்பாத்தி கொத்து தயார்
Published at : 15 Jul 2024 11:50 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement