மேலும் அறிய
AK 62 : ட்விட்டர் பக்கத்திலிருந்து அஜித் படத்தை மாற்றிய நயனின் கணவர்.. அப்போ ஏகே 62 படத்தை இயக்கப்போவது யார்?
இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பயோவில் இருந்து ஏகே 62 வையும், அஜித்தின் கவர் புகைப்படத்தையும் நீக்கியுள்ளார்.
விக்னேஷ் சிவனின் ட்விட்டர் பக்கம்
1/6

பொங்கலையொட்டி அஜித்தின் நடிப்பில், துணிவு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
2/6

அதன் பிறகு, அங்கும் இங்குமாக சுற்றுலா சென்று வருகிறார் அஜித்.
3/6

ஏகே 62 படத்தை, நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். இந்த தகவலை கேட்ட அஜித் ரசிகர்கள், சக்கரை பொங்கல் சாப்பிட்டது போல் சந்தோஷமாக இருந்தனர்.
4/6

பின்னர், ஒரு சில காரணங்களால் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷின் கையை விட்டு நழுவியதாக தகவல் வந்தது. அத்தகவலை உறுதி படுத்தும் வகையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பயோவில் இருந்து ஏகே 62 வையும், அஜித்தின் கவர் புகைப்படத்தையும் நீக்கியுள்ளார்.
5/6

தடையற தாக்க, மீகாமன், தடம், கழக தலைவன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேணி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது.
6/6

இதுவரை, ஏகே 62 படத்தின் புது கூட்டணி குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வரவில்லை.
Published at : 04 Feb 2023 12:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















