மேலும் அறிய
Jovika Vijaykumar : வனிதாவின் மகள் கதாநாயகியாக போறாங்களா? என்ன சொல்றீங்க?
Jovika Vijaykumar : பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று கம்-பேக் கொடுத்த வனிதாவின் மகள் ஜோவிதா கதாநாயகியாக களமிறங்கவுள்ளாராம்.
ஜோவிகா விஜய்குமார்
1/6

நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார். இவர் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்களிடையே பிரபலமானார்.
2/6

பிக் பாஸ் நிகழ்ச்சி முடித்துவிட்டு வெளியே வந்த பின்னர் இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. பல தொலைகாட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி டைட்டில் வின்னரானார்.
3/6

ஒரு பக்கம் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த இவர், பல சர்ச்சைகளில் சிக்கினார்.
4/6

தற்போது வனிதா மகள் ஜோவிகா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இது குறித்து வனிதா கூறும்போது “எனது மகள் சினிமாவில் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஜோவிகா மும்மையில் உள்ள அனுபம்கெர் நடிப்பு பயிற்சி இன்ஸ்டியூட்டில் ஒரு வருடமாக படித்து வருகிறார். இதில் நடிப்பையும் கற்றுக்கொண்டார்”
5/6

“இந்த இன்ஸ்டியூட்டில்தான் தீபிகா படுகோன், ப்ரீத்தி ஜிந்தா, ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் படித்துள்ளனர்.” - வனிதா
6/6

“ஜோவிகா ஹீரோயினாக நடிக்க கதை கேட்டு வருகிறோம். எந்த கதாநாயகனுடன் முதலில் நடிப்பது என்பதை விட ஹீரோயினாக நல்ல கதாபாத்திரமும் கதைகளமும் இருக்கிறதா என்பதை பார்த்து வருகிறோம். விரைவில் எனது மகள் நடிக்கும் படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் ”என்றார் வனிதா
Published at : 24 Aug 2023 01:49 PM (IST)
மேலும் படிக்க





















