மேலும் அறிய

Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் அறிவித்துள்ளது. விவரங்களை பார்க்கலாம்.

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று திரும்ப வசதியாக, நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஊர்களுக்கு எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையை பார்க்கலாம்.

கும்பகோணம் கோட்டம் சார்பாக சிறப்புப் பேருந்துகள் குறித்து அறிக்கை

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் குறித்து, கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் தசரதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பொதுமக்கள் எளிதாகவும், எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் (நடைமேடை எண்-7), அரியலூர், ஜெயங்கொண்டம் (நடைமேடை எண்-8) திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் (நடைமேடை எண்-5) ஆகிய ஊர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 450 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேபோல், வரும் 10-ம் தேதி 450 கூடுதல் பேருந்துகளும், 11-ம் தேதி 100 கூடுதல் பேருந்துகளும், 12-ம் தேதி 750 கூடுதல் பேருந்துகளும், 13-ம் தேதி 850 கூடுதல் பேருந்துகளும், 14-ம் தேதி 800 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

இதனுடன், திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும், நாளை (வெள்ளிக்கிழமை) 250 கூடுதல் பேருந்துகளும், 10-ம் தேதி 250 கூடுதல் பேருந்துகளும் 11-ம் தேதி 150 கூடுதல் பேருந்துகளும், 12-ம் தேதி 250 கூடுதல் பேருந்துகளும், 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 575 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும், அனைத்து நகர் பேருந்துகளும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப இயக்க, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் முடிந்து திரும்ப, அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில், கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிரமங்களை தவிர்க்கும் வகையில், பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் வசதிக்காக, முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, பேருந்து இயக்கத்தை ஒழுங்குப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் கூறப்படுள்ளது.

 

 

தலைப்பு செய்திகள்

ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget