மேலும் அறிய

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு

ADMK alliance: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியை வருகிற பொங்கலுக்கு முன்னதாக இறுதிவடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி ஜனவரி 23ஆம் தேதி கலந்துகொள்ளவுள்ள கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற அதிமுக தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

நெருங்கும் தமிழக தேர்தல்- சூடு பிடிக்கும் அரசியல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களில் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அதிலும் அதிமுக கூட்டணி வேகவேகமாக தேர்தல் கூட்டணியை உறுதி செய்து வருகிறது. அந்த வகையில் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்த எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து செல்லாமல் ஒருங்கிணைக்கும் வகையில், பாஜகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக, அடுத்தாக பாமகவையும் இணைத்துள்ளது. விரைவில் தேமுதிகவையும் அதிமுக கூட்டணியில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்

பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா திருச்சி வந்து சென்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்தது. கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அடுத்தாக அமமுகவை இணைக்க தொடர்ந்து திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதே போல தேமுதிகவையும் கூட்டணியில் இணைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முடிந்த சில நாட்களுக்குள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இறுதிவடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

23ஆம் தேதிக்குள் அதிமுக கூட்டணி இறுதி வடிவம்

அந்த வகையில், அமமுக, தேமுதிகவை இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  பேச்சுவார்த்தையில் உள்ள கட்சிகளிடம் இருந்து  சாதகமான பதில்களை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட அம்சங்களின் உடன்பாட்டை ஏற்படுத்தி முக்கிய கட்சிகளை வரும் 23ம் தேதிக்குள் கூட்டணியில் இணைக்க தீவிரப்பணியானது தொடங்கியுள்ளது. கூட்டணி இறுதி வடிவம் பெற்ற உடன் வரும் 23ம் தேதி தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டணிக்குள்  அமமுக, தேமுதிக கட்சிகள் வரும்பட்சத்தில் அனைத்து  கூட்டணி கட்சி தலைவர்களையும் பிரதமருடன் வரும் 23ம் தேதி மேடை ஏறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

நாளை முக்கிய பேச்சுவார்த்தை

வருகிற 23ம் தேதிக்குள் கூட்டணி இறுதிவடிவம் பெறவில்லை என்றால் 28ம் தேதிக்குள் இறுதிவடிவம் பெறும் வகையில் ஏற்பாடு நடைபெற்று வருவதாக அதிமுக வட்டார தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளை காலை எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர். ஜனவரி 23 ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் நாளை நடைபெறும் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு...அதிரும் அரசியல் களம்...
CM Vijay: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget