மேலும் அறிய
Vadivelu : ராதிகாவும் வடிவேலுவும்..சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வேடிக்கையான சம்பவம்!
சந்திரமுகி படப்பிடிப்பில் நடக்கும் வேடிக்கையான விஷயங்களை பதிவிட்டு வரும் ராதிகா சரத்குமார், வடிவேலுடன் இணைந்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ராதிகா மற்றும் வடிவேலு
1/6

ஒரு காலத்தில், தன் உடல் மொழியை வைத்தே காமெடி செய்து கோலிவுட்டை கலக்கி வந்தவர் நடிகர் வடிவேலு.
2/6

வருடத்திற்கு பல படங்களில் கமிட்டாகி வந்த வடிவேலுவின் காட்டில் மழை நின்றுதனால், வருடத்திற்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
3/6

காவலன் படத்திற்கு பின் இவர் நடித்த ஒவ்வொரு படத்தையும் எதிர்நோக்கி இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
4/6

சமீபத்தில் வடிவேலுவின் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படமும் அதற்கு விதிவிலக்கல்ல.
5/6

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ளார். இவர் பாடிய ‘ராசா கண்ணு’பாடல் மக்களின் மனதை கனக்கச் செய்தது.
6/6

மாமன்னன் படத்தை தவிர்த்து சந்திரமுகி 2விலும் இவர் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் நடக்கும் வேடிக்கையான விஷயங்களை பதிவிட்டு வரும் ராதிகா சரத்குமார், வடிவேலுடன் இணைந்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ‘ரிஸ்க் எடுக்குறது எனக்கு 'ரஸ்க்' சாப்பிடுற மாதிரி’என வசனம் பேசிய வடிவேலுவின் புது வீடியோ ட்ரெண்டாகிறது.
Published at : 27 May 2023 04:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement