மேலும் அறிய
Hopeful Songs : காற்றை போல் மனசை லேசாக்க உதவும் தமிழ் சினிமாவின் பாடல்கள் இதோ!
எல்லா நாளும் ஒரே போல் இருப்பதில்லை. சில நாட்களை சந்திப்பதற்கு நமக்கு போதுமான வலிமை இருப்பதில்லை. அந்த நேரங்களில் நமக்கு, சிறிதளவு நம்பிக்கை கொடுக்கும் சில பாடல்களை பற்றி பார்ப்போம்.

நம்பிக்கை உணர்வை தரும் பாடல்கள்
1/8

ஒரு நாளில்: அலைந்து திரிந்து ஆசைகளை விரட்டி, வெற்றித் தோல்வி, போட்டி பொறாமை என ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் இதெல்லாம் எதற்காக என்று யோசித்துப் பார்க்கும் போது இப்பாடலை கேளுங்கள்.
2/8

நெஞ்சே எழு: ‘வலியால் உள்ளுயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே..’எப்படியான ஒரு துயரத்தில் இருந்தும் மீட்கக் கூடியது காதல்தான் என்பதை உணர்த்தும் பாடல்.
3/8

கையிலே ஆகாசம்: சூரரைப் போற்று திரைப்படத்தில் வைகம் விஜய லக்ஷ்மி பாடிய பாடல் இது.
4/8

நான் நீ: சக்திஸ்ரீ கோபாலன் குரலில் மிக அழகானப் பாடல்
5/8

என்னென்ன செய்தோம்: கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ இந்தப்பாடல் நம்மை ஏதோ ஒன்றிடம் சரணடையச் செய்யும்.
6/8

தல கோதும்: ஷான் ரோல்டனின் இசையில் பிரதீப் குமார் குரலில் அமைந்த இந்தப் பாடல் இன்று பலர் மனதை தேற்றும் பாடலாக இருக்கிறது.
7/8

பொய் வாழ்வா: மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்ற பொய் வாழ்வா பாடல்
8/8

ஏன் ராசா: வாழ்க்கை ஒன்றும் பாரம் இல்ல வா லேசா என்று ஆறுதலளிக்கக் கூடியப் பாடல்
Published at : 12 May 2023 08:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement