2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து, பிரபல ஜோதிடர் பிரசாந்த் கனியின் கணிப்பு விவாதப் பொருளாக மாறியுள்ளது. விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் முதல்வராக வாய்ப்புள்ளதா? அல்லது அவரது கட்சியின் நிலை என்னவாக இருக்கும்? என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
பிரபல ஜோதிடர் பிரசாந்த் கனி கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களை துல்லியமாக கணித்துள்ளார். அதேபோல் நடிகை சமந்தாவுக்கு 2025 ஆம் ஆண்டு திருமணம் நடக்கும் என்று அவர் கணித்து இருந்தார். அதன்படியே சமந்தாவிற்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. வங்கதேசத்தில் ஆட்சி கவிழும் என்று முன் கூட்டியே அவர் கணித்த நிலையில், அதன்படியே ஆட்சி கவிழ்ந்து. இப்படிப்பட்ட நிலையில்தான் நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் பற்றியும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பது பற்றியும் பிரபல ஜோசியரான பிரஷாந்த் கினி கணிப்பு ட்ரெண்டாகி வருகிறது.
ஜோதிடர் பிரசாந்த் கனி தமிழக வெற்றிக் கழகம் தோல்வி அடையும் என்று கணித்துள்ளனர். விஜய் தமிழ்நாடு 2026 சட்டசபை தேர்தலில் வெல்ல மாட்டார். அவரின் கட்சி பெரிய தாக்தை ஏற்படுத்தாது. அவரின் கட்சி ஒற்றை இலக்க தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று கூறி உள்ளார்.
அதாவது அவரது கணிப்பின்படி 2026 தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கைப் பெறும் என்றும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் விஜய்க்குப் பெரிய பலமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்யின் ஜாதகத்தில் 2031-ம் ஆண்டு தான் சிம்மாசன யோகம் மிக வலுவாக இருப்பதாக கூறிய ஜோதிடர் பிரசாந்த் கனி 2026 முதல் 2031 வரையிலான ஐந்து ஆண்டுகளில் விஜய் மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாகத் தடம் பதிப்பார் என்றும், அந்த காலகட்டத்தில் அவருக்குக் கிடைக்கும் அரசியல் அனுபவம் 2031-ல் அவரை அரியணையில் அமர்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் ஜாதக ரீதியாக சனி மற்றும் குருவின் பெயர்ச்சிகள் 2030-க்குப் பிறகு அவருக்குச் சாதகமாக அமைவதாகவும், இதன் காரணமாகவே 2031 தேர்தலில் அவர் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகவும் பிரசாந்த் கனியின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது 2026 சட்டமன்றத் தேர்தலை விட 2031 சட்டமன்றத் தேர்தலே விஜய்க்கு மிகவும் சாதகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் விஜய்க்கு ஜன நாயகன் கடைசிப் படமாக இருக்கப் போவதில்லை என்றும் அவர் 2028 2029-ல் மீண்டும் நடிப்பார் என்றும் அவர் நடிக்கும் கடைசிப் படம் 2029-ல் திரைக்கு வரும் எனவும் அவர் கணித்துள்ளார். ஜோதிடரின் இந்தக் கணிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.





















