Gold Rate Reduced Jan.7th: ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
தங்கத்தின் விலை இன்று காலை உயர்ந்த நிலையில், மாலையில் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது. எனினும், விலை தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் தான் உள்ளது. வெள்ளி விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி, தொடர் உயர்வை சந்தித்து வந்த நிலையில், அதாவது இன்று காலை வரை விலை உயர்ந்து வந்த நிலையில், மாலையில் சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் தற்போதைய விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
விலை உயர்வதும், குறைவதுமாய் ட்விஸ்ட் அடிக்கும் தங்கம்
தங்கத்தின் விலை புத்தாண்டைத் தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருந்தது. புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ், அதாவது சவரன் 99,520 ரூபாயாக இருந்தது. ஒரு கிராம் 12,440 ரூபாயாக இருந்தது.
இந்நிலையில், 2-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது. அதன்படி, ஒரு கிராம் 12,580 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,00,800 ரூபாயாகவும் விற்பனையானது. தொடர்ந்து, 3-ம் தேதி மேலும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,600 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,00,800 ரூபாயாகவும் விற்கப்பட்டது.
பின்னர், 4-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 5-ம் தேதி அதிரடியாக ஒரே நாளில் 1,280 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,760 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,02,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
6-ம் தேதியான நேற்று மேலும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,830 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,02,640 ரூபாயாகவும் உயர்ந்தது. இந்நிலையில், இன்று காலை தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், மாலையில் குறைந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை என்ன.?
7-ம் தேதியான இன்று காலையில், தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,870 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 1,02,960 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், மாலையில் கிராமிற்கு 70 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கணிசமாக குறைவு
இதேபோல் வெள்ளி விலையும் இன்று கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 1-ம் தேதி 256 ரூபாயாகவும், 2-ம் தேதி விலை உயர்ந்து 260 ரூபாயாகவும், 3 மற்றும் 4-ம் தேதிகளில் விலை குறைந்து 257 ரூபாயாகவும் இருந்தது வெள்ளியின் விலை.
இந்நிலையில், 5-ம் தேதி கிராமிற்கு 6 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 266 ரூபாயாக இருந்தது. தொடர்ந்து, 6-ம் தேதியான நேற்று, மேலும் 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 271 ரூபாய்க்கு சென்றது.
தொடர்ந்து, 7-ம் தேதியான இன்று காலை அதிரடியாக கிராமிற்கு 12 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 283 ரூபாய்க்கு எகிறியது.
ஆனால், மாலையில் 6 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 277 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





















