வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
ராணுவ நடவடிக்கையால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவின் மோசமான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசின் தகவல்படி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் எலைட் பிரிவான 'டெல்டா ஃபோர்ஸ்' மற்றும் சிஐஏ உளவு அமைப்பின் ரகசியத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு வெனிசுலா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அங்கு நிலவும் மிக மோசமான மற்றும் நிச்சயமற்ற சூழல் காரணமாகவே இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
வெனிசுலாவில் அமெரிக்க ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் உலகையே உலுக்கியுள்ளது. கைது செய்யப்பட்ட அதிபர் நிகோலஸ் மதுரோ இப்போது அமெரிக்காவின் மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் பயங்கரமான நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வன்முறை, கூட்ட நெரிசல், இருள் மற்றும் பயத்திற்குப் பெயர் பெற்ற இந்த சிறையில் மதுரோ அடைக்கப்பட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது: இது வெறும் சிறைத் தண்டனையா அல்லது உலக அரசியலுக்கான பெரிய செய்தியா? என பல கேள்விகள் எழுகின்றன.
அதேநேரம், இது அமெரிக்காவின் மிகவும் பயங்கரமான மற்றும் இழிவான சிறையாக ஏன் கருதப்படுகிறது. மதுரோ நியூயார்க்கில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், அங்கு அவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதி குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும். அமெரிக்க ஊடகங்களின்படி, இந்த நடவடிக்கை அமெரிக்காவின் கடுமையான கொள்கையின் ஒரு பகுதியாகும் மற்றும் சர்வதேச அளவில் ஒரு செய்தியை அனுப்பும் முயற்சியாகும் என கூறப்படுகிறது.....





















