தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
2026-ன் தொடக்கத்தில் வெள்ளி விலை தங்கத்தை விட மிக வேகமாக உயர்ந்து வருவது முதலீட்டாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தை விட வெள்ளி விலை கிடுகிடுவென உயரக் காரணம் என்ன என பார்க்கலாம்
தங்கம் பெரும்பாலும் ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், ஆபரணமாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், வெள்ளி ஒரு அத்தியாவசியத் தொழில்துறை உலோகம்.
அதாவது Solar Panels, மின்சார வாகனங்கள் மற்றும் 5G தொழில்நுட்பத்தில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2026-ல் உலகம் முழுவதும் பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், வெள்ளிக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மேலும் உலகளவில் வெள்ளியின் உற்பத்தி அதன் தேவையை விட குறைவாக உள்ளது. குறிப்பாக, லண்டன் போன்ற சர்வதேச வர்த்தக மையங்களில் வெள்ளியின் கையிருப்பு குறைந்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2026 ஜனவரி முதல் சீனா வெள்ளி ஏற்றுமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது உலகச் சந்தையில் வெள்ளி வளத்தைக் குறைத்து விலையை உயர்த்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக வெள்ளி ஒரு 'ஹை-பீட்டா' உலோகம். அதாவது, தங்கம் விலை உயரும்போது, வெள்ளி அதை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு வேகத்தில் உயரும் குணம் கொண்டது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விட வெள்ளியில் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி அதில் முதலீடு செய்கிறார்கள்.
சமீபகாலமாக Silver ETF போன்ற டிஜிட்டல் முதலீடுகள் அதிகரித்துள்ளன. 2025-ல் வெள்ளி சுமார் 125% - 130% வரை லாபத்தை ஈட்டியுள்ளது, அதேசமயம் தங்கம் சுமார் 60% மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த அதீத லாபமே மக்களை வெள்ளியை நோக்கி ஈர்க்கிறது.





















