மேலும் அறிய

இயற்கை விவசாயம்... மாற்றி யோசித்து நிறைவான வருமானம் பெற்ற வெற்றி விவசாயி

பாரம்பரிய ரகங்களான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூய மல்லி, காட்டுயானம், இலுப்பப்பூ சம்பா, சீரக சம்பா, ரத்தசாலி, பூங்கார், கருங்குறுவை சாகுபடி மேற்கொள்கிறார்.

தஞ்சாவூர்:  பிடி உணவாக இருந்தாலும் நஞ்சில்லாத உணவே மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆண்டுகளால் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து மதிப்புக்கூட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அரிசியாக, சத்து மாவாக, அவலாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி மனநிறைவோடு வாழ்க்கை நடத்துகிறார் தஞ்சாவூர் மாவட்டம் மாரநேரியை சேர்ந்த இயற்கை விவசாயி பசுபதி.

இயற்கை விவசாயத்தில் மாற்றி யோசித்து மனம் நிறைவான வருமானத்தை எடுத்து வருகிறார். இயற்கை விவசாயத்தின் மீதான நாட்டம், அதில் மாற்றி யோசித்து வெற்றிகரமான வருமானத்தை பெற்று வருகிறார் பசுபதி. அவர் கூறியதாவது: எனது அப்பா ராசு. 95 வயதில் இறந்தார். ஆனால் எனது அம்மா நாச்சியாயி (65) வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். மக்கள் அதிக நாட்கள் வாழ வேண்டும். ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்ற நோக்கத்தோடு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் சாகுபடி முறைகளை அறிந்து கடந்த 25 ஆண்டுகளாக நஞ்சில்லாத பராம்பரிய நெல் ரகங்களை மட்டும் சாகுபடி செய்து வருகிறேன். எனது மகன் திலீபன் (26) பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு 4 ஆண்டுகள் வெளியில் வேலை பார்தது வந்தார்.

இப்போது என்னோடு சாகுபடி பணிகளையும், அரிசி, விதை நெல், சத்து மாவு ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். நம் பாரம்பரிய ரகங்களான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூய மல்லி, காட்டுயானம், இலுப்பப்பூ சம்பா, சீரக சம்பா, ரத்தசாலி, பூங்கார், கருங்குறுவை, சேலம் சன்னம், 60ம் குறுவை ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை மாற்றி, மாற்றி சாகுபடி செய்கிறேன். 2 போகம் மட்டுமே சாகுபடி செய்கிறேன்.

இந்த குறுவை பருவகாலத்திற்கு கருங்குறுவையும், தூயமல்லியும் சாகுபடி செய்துள்ளேன். இருபோகம் மட்டுமே சாகுபடி செய்கிறேன். ஆற்றுப் பாசனத்தை நம்பியே இந்த இயற்கை விவசாயத்தை செய்து வருகிறேன்.  அடுத்த முறை இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்த மணி சம்பா, தீராத தலைவலியையும் தீர்க்கும் மிளகு சம்பா ஆகியவற்றை சாகுபடி செய்ய உள்ளேன். நெல் சாகுபடி செய்வதற்கு முன்பாக கோடை காலத்தில் என் வயலில் தக்கைப்பூண்டு, நவதானியங்களை விதைப்பேன். பின்னர் அவை நன்கு வளர்ந்து வந்த பின்னர் அவற்றை அப்படியே வயலில் மடக்கி வயலை 4 முறை நன்கு உழுது விடுவேன்.

இதனால் இவற்றில் உள்ள சத்துக்கள் மண்ணில் இறங்கி சாகுபடி பயிர்களுக்கு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கும். இதோடு தென்னை நார் மட்டைகளையும் மக்க செய்து வயலில் இடுவதால் நுண்ணுயிர்கள் பல்கி பெருகும்.  இதனால் நெல் பயிர்கள் அதிக தூர் கட்டும். நாற்று நட்ட 3ம் நாள் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சாணம், 10 லிட்டர் கோமியம், 1 கிலோ வெல்லம், சத்துக்கள் நிறைந்த பழுத்த பப்பாளி அல்லது வாழைப்பழம் ஆகியவற்றை நன்கு கரைத்து 2 நாட்கள் வைத்திருந்து 20 லிட்டருக்கு 100 லிட்டர் தண்ணீர் கலந்து மடையில் தண்ணீர் திறக்கும் போது அதில் ஊற்றுவேன்.

இதனால் பயிர்களின் வேருக்கு தண்ணீருடன் இந்த கலவை கலந்து நன்கு வளர்ச்சி பெற செய்யும். இதனால் தூர்கள் அதிகம் ஏற்பட்டு மகசூலும் அதிகரிக்கும். இதேபோல் 20ம் நாளில் 5 கிலோ கடலை புண்ணாக்கு, 10 கிலோ தேங்காய் புண்ணாக்கு, 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு, கொட்டமுத்து, ஆட்டு எரு, பஞ்ச கவ்யம் 5 லிட்டர் சேர்த்து தெளிப்பேன். இடையில் ஒருமுறை களை எடுத்தால் போதும். பின்னர் 35ம் நாளில் பயிர் வளர்ச்சிக்கு பஞ்சகவ்யம், மீன் அமிலத்தை கலந்து பயிர்கள் மீது நன்கு படும் படி தெளிக்க வேண்டும். பின்னர் 45ம் நாளில் பயிர்கள் நன்கு வளர்ந்து இருக்கும் நிலையில் மீன் அமிலத்தை 2 லிட்டர் அளவிற்கு எடுத்து தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் பயிர்களின் வளர்ச்சிக்கு நன்கு ஊக்கியாக செயல்படும். இதனால் நெல் மணிகள் அதிகம் பிடித்து வளரும்.

இந்த நிலையில் குருத்துப்பூச்சி, மஞ்சள் நோய் தாக்குதல், மீன் அமிலம் ஆகியவற்றை தேவை என்றால் மட்டும் தெளித்தால் போதும். அடுத்தது கதிர் வரும் நேரத்தில் 2 லிட்டர் பூச்சி விரட்டியை தெளிக்க வேண்டும். இந்த பூச்சி விரட்டியை நானே தயாரித்து வைத்து கொள்வேன். இதற்கு நெய்வேலி காட்டாமணக்கு, ஆடாதொடை, பலா இலை, காட்டுக் கொட்டை, புங்கன், வேப்பம், இலுப்பை இலைகளை தலா இரண்டு கிலோ வீதமும், பிரண்டை 2 கிலோ, பூண்டு அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, புகையிலை காம்பு மற்றும் மாட்டு கோமியம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 45 நாட்கள் ஊற வைத்து பூச்சி விரட்டியை தயாரித்து வைத்துக் கொள்வேன்.

இந்த பூச்சி விரட்டியை கதிர்வரும் நேரத்தில் தெளிப்பதால் பயிர்கள் பூச்சிகள் பாதிப்பில் இருந்து தப்பிக்கும். கருங்குறுவை நெல் ரகம் 110 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். இது இயற்கை மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.  கருங்குறுவை நெல்லை விதைப்பதற்கு முன், விதைகளை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

கருங்குறுவைக்கு அதிக தண்ணீர் தேவைப்படாது. இயற்கை உரங்களான தொழு உரம், பஞ்சகவ்யா போன்றவற்றை பயன்படுத்தலாம். இயற்கை முறையில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம் அல்லது வேப்ப எண்ணெய் போன்றவற்றை தெளிக்கலாம். நடவு செய்த 110 நாட்களில் அறுவடை செய்யலாம். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் போது மொத்தமாக எரு அடித்தல், நாற்று நடுதல், களை பறித்தல் என மொத்தமாக செலவுகள் ரூ.15 ஆயிரம் ஆக குறைகிறது. நான் விதை நெல், மதிப்புக்கூட்டி அரிசி, அவல், சத்து மாவாக விற்பனை செய்து வருகிறேன்.

தமிழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எனக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். முழுமையான இயற்கை முறையில் சாகுபடி செய்வதை அறிந்து சிங்கப்பூர், அமெரிக்கா, குவைத் போன்ற நாடுகளுக்கும் அரிசி வகைகளை அனுப்பி வந்தேன். முக்கியமாக பெங்களூரில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் கருப்புக்கவுனி அரிசியைதான் அதிகம் வாங்குகின்றனர். அதற்கு பிறகு சித்தசன்னா, தூய மல்லி, சொர்ண மயூரி, சீரக சம்பா, காட்டுயானம் ஆகியவற்றை விரும்பி வாங்குகின்றனர். எங்கள் வாடிக்கையாளர்களில் சிலர்  ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மும்பை, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்.

இப்போ அரிசியாக அனுப்ப தடை இருக்கு. அதனால் வெளிநாட்டில் உள்ளவர்களின் உறவினர் கருப்பு கவுனி, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா ஆகியவற்றை வாங்கி மாவாக மாற்றி எடுத்து செல்கின்றனர்.  எனக்கும் எனது மகனுக்கும் இயற்கை விவசாயம் மனநிறைவை அளிக்கிறது.  இருபோகம் மட்டுமே சாகுபடி செய்து வருகிறேன். இலவச மின் இணைப்பு கிடைத்தால் பம்ப் செட் அமைத்து மூன்று போகம் செய்யலாம். எனது சாகுபடி வயலை சுற்றிலும் தேக்கு மரங்கள், தென்னை மரங்கள், பூவன், கற்பூர வல்லி, சந்தன மரம், செம்மரம் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். இவை அனைத்தும் இயற்கைமுறை சாகுபடி என்பதால் நன்கு வளர்ந்து பயன் தருகிறது. இவற்றின் இலைகளை சாகுபடிக்கு முன்பு வயலில் கொட்டி மக்கி போக செய்து உழும் போது இன்னும் அதிக விளைச்சல் கிடைக்கிறது. பஞ்ச கவ்யம் தயாரிக்க கோமியம் முக்கியம்,  இதற்காக 10 நாட்டு மாடுகள் வளர்க்கிறேன். எங்கள் தோப்பில் ஆச்சரியப்படும் வகையில் 2 விஷயங்கள் உள்ளது. முழுமையாக  பட்டு போன பலா மரம் மீன் அமிலத்தை ஊற்றியதால் தற்போது நன்கு வளர்ந்து நிறைய பலாப்பழங்கள் காய்த்தன. 

அதை விட அடுத்தது 2 ஆப்பிள் மரங்கள் நன்கு வளர்ந்து வருகிறது என்பதுதான். விதையாக, அரிசியாக, அவல் மற்றும் சத்து மாவாக விற்பனை செய்யும் போது இன்னும் அதிகம் லாபம் கிடைக்கிறது. சராசரியாக 2 போகத்திற்கும் (7 மாதங்கள்) 30 முதல் 40 ஆயிரம் செலவு என்றால்  லாபமாக ரூ.3.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. ஒரு பிடி உணவாக இருந்தாலும் அது உடலுக்கு கேடு விளைவிக்காததாக இருக்க வேண்டும் என்பதுதான். என் அம்மா காலமாகும் போது அவருக்கு வயது 65. அதற்கு பின்னர் என் தந்தைக்கு இயற்கை சாகுபடி உணவுதான் அவர் ஆரோக்கியமாக 95 வயது வரை வாழ்ந்தார்.

இதுதான் வேண்டும். நன்கு ஆரோக்கியமான வாழ்வுதான் சிறப்பானது. அதை தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர். எனக்கு லாபமும் கிடைக்கிறது. மன திருப்தியும் உள்ளது. மேலும் விவசாயிகள் குழு அமைத்து பலரையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்றியுள்ளேன். வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் பயிற்சிக்காக இங்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget