மேலும் அறிய

JanaNayagan : ஜனநாயகன் சென்சார் சர்ச்சையில் ஜனவரி 27 ஆம் தேதி தீர்ப்பு..உச்ச நீதிமன்றம் வரை செல்லுமா?

விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் மேல்முறையீட்டு வழக்கில் ஜனவரி 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்க இருக்கின்றன தலைமை நீதிபதிகள்

ஜனநாயகன் படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கும்படி தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிடி ஆஷா உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதிகள் மகேந்திரா மோகன் ஶ்ரீவஸ்தவா மற்றும் ஜி அருள்மோகன் முன் இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. படக்குழு மற்றும் தணிக்கை வாரியம் ஆகிய இருதரப்பினரின் வாதங்களை கேட்டபின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். தற்போது உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளனர் தலைமை நீதிபதிகள். 

எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் மத்திய சென்சார் வாரியம் இப்படத்திற்கு முதலில் U/A 16+ சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்தது. தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் படத்தில் ராணுவத்தை தவறாக சித்தரிக்கும் சர்ச்சைகுரிய காட்சிகள் இருப்பதாக அளித்த புகாரின் அடிப்படையில் படத்தின் தணிக்கை சான்றிதழை நிறுத்தி படத்தை மறுதணிக்கைக்கு அனுப்ப முடிவு செய்தது.  தணிக்கை வாரியத்தின் மறுதணிக்கை  முடிவிற்கு எதிராக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் நிறுவனம்.

இதனைத் தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பிடி ஆஷா ஜனநாயகன் படத்திற்கு U/A 16+ வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவை வாங்கியது.

உச்ச நீதிமன்றம் செல்லுமா தணிக்கை குழு ?

கடந்த ஜனவரி 20 ஆம் தேதி தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதிகள் தலைமை நீதிபதிகள் மகேந்திரா மோகன் ஶ்ரீவஸ்தவா மற்றும் ஜி அருள்மோகன் ஆகியோர் விசாரித்தனர். இதில் தணிக்கை வாரியம் மற்றும் கேவிஎன் ப்ரோடக்‌ஷன் இருதரப்பினர் சார்பிலும் அவரவர் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வரும் ஜனவரி 27 ஆம் தேதி தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிரான  மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்க இருக்கின்றன. தலைமை நீதிபதிகளின் தீர்ப்பு சாதகமாக அமையாவிட்டால் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. தீர்ப்பு வழங்கிய அதே நாளில் மேல்முறையீடு செய்வது சாத்தியம் இல்லாததால் அடுத்த வாரம் புதன்கிழமை மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம் .

 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget