அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
தர்மாகோல் போட்டு வைகை அணையை மூடிய நகைச்சுவை சம்பவத்திற்கு டப் கொடுக்கும் விதமாக மாநகராட்சி ஊழியர்கள் கொசுவலை கொண்டு மழை நீர் வடிகால்வாய் துளைகளை மூடிய சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. சீப்பு இருந்தா தானே கல்யாணம் நடக்கும் ஓட்டைகள் இருந்தா தானே கொசுக்கள் உற்பத்தியாகும் என வடிவேலு பட நகைச்சுவை காட்சியை அதிகாரிகள் நினைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் உள்ள வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுப்பதற்காக அப்போதைய அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு அணையில் தர்மாக்கோல்களை வைத்து மூடும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிய நிலையில் தற்போது அந்த சம்பவத்திற்கு டப் கொடுக்கும் வகையில் ஒரு சம்பவத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் மூலம் திருவெற்றியூர் பகுதியில் அரங்கேற்றியுள்ளனர்.
மழை பெய்தால் மழை நீர் சாலையில் தேங்காத வண்ணம் இருக்க நாலாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மாநகராட்சி முழுவதும் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இப்படியாக திருவொற்றியூர் பகுதியில் முடிக்கப்பட்டுள்ள மழை நீர் படி கால்வாய்களின் மேலே உள்ள இரும்பு துளைகளில் மாநகராட்சி ஊழியர்கள் கொசு வலையை போர்த்தி வருகின்றனர்.
தேங்கும் மழை நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர்கள் கூறிய நிலையில் மழைநீர் வடிகால் மீது துளைகள் இருந்தால் தானே கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதைப் போல கொசு வலையில் துளைகள் மூடப்பட்ட சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தினாலும் சர்ச்சையிலும் சிக்கி உள்ளது.





















