மேலும் அறிய
Sudha Kongara : அப்போ சூர்யா... இப்போ அக்ஷய் குமார்.. நெகிழ்ச்சியான பதிவை ஷேர் செய்த சுதா கொங்கரா!
Sudha Kongara : ஜூலை 12 ஆம் தேதி சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி வெர்ஷனான சர்ஃபிரா வெளியாகவுள்ளது.

சுதா கொங்கரா - சூர்யா - அக்ஷய் குமார்
1/6

நடிகை ரேவதி இயக்கத்தில் வெளிவந்த மித்ர் மை ப்ரெண்ட் படத்திற்கு திரைக்கதை எழுதி சினிமா உலகில் அறிமுகமானவர் சுதா கொங்கரா
2/6

அதனை தொடர்ந்து துரோகி என்ற படத்தை இயக்கினார். இருப்பினும் மாதவன் - ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படம் பலரது கவனத்தை ஈர்த்தது.
3/6

அடுத்ததாக தொழிலதிபர் மற்றும் விமான படை வீரரான கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கினார்.
4/6

சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் பல விருதுகளை அள்ளி குவித்தது. குறிப்பாக சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த இசை உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதை வென்றது.
5/6

இந்த படம் ஹிட்டான உடன், இதன் ஹிந்தி வெர்ஷனை ஆக்ஷய் குமாரை வைத்து எடுக்க முடிவெடுத்தார் சுதா. இதற்கு சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டது.
6/6

இப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சுதா தனது இன்ஸ்டாவில் ப்ரோமோஷனுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். “அன்று ஸ்கிரிப்ட் பற்றி கலந்துரையாட நாங்கள் சந்தித்தது. இப்போது கிட்டத்தட்ட பயணம் முடிந்து விட்டது. சர்ஃபிரா படத்திற்கான ப்ரோமோஷன்கள் நடந்து வருகிறது. கேப்டன் கோபிநாத் பல இடங்களுக்கு அழைத்து சென்றுவிட்டார்.” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Published at : 09 Jul 2024 05:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
கிரிக்கெட்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement