Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2,560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 99,000 ரூபாயை நெருங்கியுள்ளது. தங்கத்தின் இன்றைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்பதற்க சாட்சியாக, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 99,000 ரூபாயை நெருங்கியுள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் இன்றைய விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
மூச்சை அடைக்க வைக்கும் தங்கம் விலை
தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது சவரன் 99,000 ரூபாயை எட்டியுள்ளது. விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடும் என்பதில் சந்தேகமில்லாமல் ஆகிவிட்டது.
இந்த வாரத்தின் தொடக்க நாளான 8-ம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராம் 12,040 ரூபாயாகவும், ஒரு சவரன் 96,320 ரூபாயாகவும் இருந்தது. பின்னர் 9-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் சரியாக 12,000 ரூபாய்க்கும், ஒரு சவரன் 96,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 10-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,030 ரூபாய்க்கும், ஒரு சவரன் 96,240 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 11-ம் தேதியான நேற்றும் சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,050 ரூபாயாகவும், ஒரு சவரன் 96,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் இன்றைய விலை என்ன.?
இந்நிலையில், இன்று காலை அதிரடியாக கிராமிற்கு 200 ரூபாயும், சவரனுக்கு 1,600 ரூபாயும் உயர்ந்தது தங்கததின் விலை. அதன்படி, காலையில் ஒரு கிராம் 12,250 ரூபாயாகவும், ஒரு சவரன் சரியாக 98,000 ரூபாயாகவும் விற்பனையானது.
இந்த சூழலில், மாலையில் மீண்டும் விலை உயர்ந்து, வரலாறு காணாத உச்சத்திற்கு சென்றுள்ளது தங்கத்தின் விலை. அதன்படி, மாலையில் கிராமிற்கு மேலும் 120 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,370 ரூபாய்க்கு எகிறியுள்ளது. சவரனுக்கு மேலும், 960 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 98,960 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,560 ரூபாய் விலை உயர்ந்ததால், தங்கம் வாங்குவோர் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
வெள்ளி விலையும் உயர்ந்து புதி உச்சம்
இதேபோல், வெள்ளியின் விலையும் மக்களை பயமுறுத்தி வருகிறது. கடந்த 8-ம் தேதி வெள்ளியின் விலை கிராம் 198 ரூபாயாக இருந்த நிலையில், 9-ம் தேதி ஒரு ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 199 ரூபாய் ஆனது.
இந்நிலையில், 10-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 8 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 207 ரூபாயாக விற்கப்பட்டது. தொடர்ந்து, 11-ம் தேதியான நேற்று கிராமிற்கு 2 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 209 ரூபாயை எட்டியது.
இந்த சூழலில், வெள்ளியின் விலை இன்று காலை கிராமிற்கு 6 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 215 ரூபாய் என் உச்சத்தை எட்டியது.
இந்நிலையில், மாலையில் மீண்டும் ஒரு ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிரம் 216 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டி, மக்களை கவலையடையச் செய்துள்ளது.





















