மேலும் அறிய
HBD Ritika Singh : ‘ஹே நூடுல்ஸ் மண்ட..’ ஓ மை கடவுளே நடிகை ரித்திகாவிற்கு இன்று பிறந்தநாள்!
HBD Ritika Singh : இன்று பிறந்தநாள் காணும் ரித்திகா சிங்கிற்கு, சக திரை நட்சத்திரங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரித்திகா சிங்
1/6

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, இறுதிச்சுற்று படம் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். சிறுவயதில் இருந்து தற்காப்பு கலை பயின்று வரும் இவருக்கு ஏதுவாக எழில் மதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
2/6

விளையாட்டு வீராங்கனையாக இருந்த இவர், சினிமா கொடுத்த வாய்ப்பை இறுகப் பற்றிக்கொண்டு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
3/6

2020 ஆம் ஆண்டில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனின் தோழியாகவும், மனைவியாகவும் நடித்து இருந்தார்.
4/6

அந்த படத்தில் அசோக் செல்வன் கொடுத்த “நூடுல்ஸ் மண்ட” என்ற அடைமொழி இன்றும் பலராலும் பின் தொடரப்பட்டு வருகிறது.
5/6

சமீபத்தில் வெளியான கொலை படத்திலும் நடித்திருந்தார். அத்துடன், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். கிங் ஆஃப் கொத்தா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.
6/6

ரஜினியின் வேட்டையன் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் ரித்திகாவிற்கு லைகா நிறுவனம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளது.
Published at : 16 Dec 2023 02:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















